Thursday, September 30, 2021

நாள்

காலையில் எழுந்தவுடன் , உள்ளங்கையை விரித்து "காரகரே வசந்தே லக்ஷ்மி கரமூலே சரஸ்வதி கரமத்யே ஸ்தித கோவிந்த, பிரபா தே கரதர்ஷனாம் " இன்றைய நாள் இனியதாக முடிய வேண்டும் என்ற எண்ணத்துடன் " துயில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு துளசி மாடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் (இது பாட்டி சொல்லிக் கொடுத்தது) , பின்னர் சுவாமி அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். "சர்வே ஜனா சுகினோ பவந்து" உலகில் உள்ள எல்லா ஜீவ ராசிகளும் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அன்றைய நாள் தொடங்கியது . முதல் நீர் ஆகாரம்,வெறும் வயிற்றில் , வெதுவெதுப்பான நீரில் தேன் எலுமிச்சை பழ சாறும் கலந்து குடித்தாள் . மனதையும் உடலையும் இலகுவாக அன்றைய யோகா பயிற்சிகள். மூச்சு பயிற்சி ஆன பிராணாயாமம்தை முடித்து விட்டு, அந்த பயிற்சிகள் தந்த அமைதியும், உற்சாகத்தையும் அனுபவித்து விட்டு, நடையும் ஓட்டமும் கலந்த அடுத்த பயிற்சிக்கு ஆயத்தம் ஆனாள் . காலையில் இந்த இரண்டு உடற்பயிற்சியும் முடித்து விட்டால் அந்த நாள் முழுதும் தேவைக்கான சுறுசுறுப்பு கிடைத்து விடும். அடுத்து அவளுடைய detox ட்ரின்க், தினமும் ஏதாவது ஒரு பழம் கலந்த சாறு, இதில் கருவேப்பிலை, இஞ்சி தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும்.. காபி, டீ அருந்துவதை நிறுத்தி பல நாட்கள் ஆகி விட்டது. முதலில் கடினமாக இருந்தாலும் பின்னர் காப்பியா? தேநீரா? அப்படியென்றால்? என்ன என்று கேட்கும் அளவிற்கு . ஆற அமர ஒரு குளியல், தோட்டத்தில் விளைந்து இருக்கும் பூ (பூஜைக்கு), காய், கீரை, அவற்றைப் பறித்து நன்கு அலசி வடிய கூடையில் போட்டு விட்டால் இவள் பூஜை முடித்து திரும்பி வருவதற்குள் அவை நறுக்குவதற்கு ஏதுவாக இருக்கும். சுமார் ஒரு மணி நீரை பூஜை, விளக்கு ஏற்றி அன்றைய விஷேச தினத்தைப் பொறுத்து நன்றாக ஒரு கோலம் போட்டு ,பிள்ளையார் வழிபாட்டில் தொடங்கி ஹனுமான் சாலிசா முடிவு பெறும். , பின்னர் நன்றாக நீர் அளாவி விட்டு, (கேழ்வரகு, சம்பா கோதுமை, பயறு , கம்பு, பாதாம் பொட்டுக்கடலை) எல்லாம் கலந்து வறுத்து அரைத்து தானே தயாரித்த வேண்டும் என்றால் மோரோ அல்லது பணங் கற்கண்டு சேர்த்து ஒரு சத்துணவு கஞ்சி. தினம் ஒரு கீரை,இன்னும் ஒரு பச்சைக் காய் அல்லது கூட்டு, குழம்பு அல்லது ரசம் , இவை தான் சமையல். சொடக்கு போடும் நேரத்தில் சமைத்து முடித்து விடுவாள், அதுவும் பாட்டுக் கேட்டு கொண்டே. சில சமயம் உறவினர்களுடன் தொலைபேசி மூலம் அரட்டை . பிறகு அன்றைய செய்திகளை இணையதளம் மூலம் படித்தல், மின்னஞ்சல்களை அலசி ஆராய்தல், முகநூல் நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து அல்லது பிற வாழ்த்துகள் பகிர்தல். ஓர் இரு புத்தகங்களையோ அல்லது மாத இதழ்கள் படித்தல் . இதற்குள் வயிற்றுக்குள் மணி அடித்து விடும், களைந்து வடித்த சாதம், காலையில் செய்து வைத்த சமையல் ஒரு பிடி. "Eat like a prince " , அதாவது மதியம் நாம் சாப்பிடும் சாப்பாடு ஒரு அரசன் உண்டுவது போல் இருக்க வேண்டுமாம். அன்றைய தொலைக்காட்சி தொடர் பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் அவளுக்குப் பிடித்த ஒன்றை ஒன்று அது அவளுடைய தினசரி பொழுது போக்குகளில் ஒன்று, மிகவும் பிடித்த கதாநாயகன் நாயகி. பின்னர் ஒரு குட்டி தூக்கம், வைத்தியர்கள் கூறு படி , அப்படி ஒரு மத்தியான தூக்கம் உடம்புக்கு மிகவும் நல்லது . சற்றே வெயில் தளர்ந்து பின்னர் செடிகளுக்கு களை எடுத்தல், நீர் பாய்ச்சி விட்டு கோவிலுக்கு தயார் ஆகி, கோவிலுக்கு ஒரு quick நடை, மேலும் ஒரு நடைப் பயிற்சி ஆயிற்று மற்றும் கோவில் சென்று வருவதால் ஆயிரம் நன்மை, அந்த positive vibes மிகவும் நல்லது. ஏன் விட்டு வைப்பானேன் ? திரும்பி வரும் வழியில் நண்பிகளிடம் பேசி அலாவிட்டு, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஒரு tiffin , ஒரு டம்ளர் மோர் . ஆயிற்று, மறுபடி தூக்கம் தான் . ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். தூங்கி எழுந்தால் மறுபடியும் ஒரு நாள் உங்களைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறது, இல்லை என்றால் "நாம் இல்லை என்று உலகம் அறிந்து கொள்ளும் நாள் அதுவாகவே அமையும்.

Wednesday, September 15, 2021

தொடர்ச்சி

அம்மா, அம்மா, வரும்போதே அம்மா புராணம்ப் பாடிக் கொண்டு வீட்டில் உள்ளே நுழைத்தாள் மதுவந்தி. கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. கடவுளே ஒரு மழைச் சாரலுக்கு பஞ்சம் வந்து விட்டதா? தயவு செய்து கருணை வேண்டும் பகவானே.  என்னடி என் கிட்டக் குறைக் கூறுகிறார் போல் ஸ்வாமி கிட்டேயும்ப் பெட்டிஷன் ஆஹ்?  நான் என்ன எனக்கு மட்டும் மா வேண்டுகிறேன் மழை வந்தால்ப் பூமிக் குளிரும், கொஞ்சம் இந்த வெயிலின் தாக்கம் குறையும். காபியைக் கொடு மா அப்புறம் வச்சுக்கோ உன்னுடைய வியாக்யானம்.  அப்புறம் சொல்லு, புது ஆபீஸ், புது பாஸ், புது டீம் லீடர், எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்? அதை ஏன் மா கேட்கிறாய், என்று ஆரம்பித்து அன்று நடந்த முழுக் கதையையும் சொல்லி முடித்தாள். பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மாவிடம் நடத்தையைக் ஒப்புவிப்பது ஒரு அலாதி சுகம்.  இப்படியாக அம்மாவைப் பெண் பாராட்டுவதும், பெண்ணை அம்மா பாராட்டுவதும் மூன்று மாதங்கள்க் கழிந்தன.  அன்றும் இதே போல் ஆபீஸ் இருந்து வந்ததும் வராததுமாக தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தாள் மதுவந்தி .அவளாகவே கூறட்டும் என்றுப் பொறுமையாக இருந்தாள். இரவு உணவு முடித்து விட்டு,அம்மா உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் என்று பீடிகை மிகப் பெரியதாக இருந்தது. கேட்டுத் தான் பார்ப்போமே என்று செவிச் சாய்த்துக் கேட்டாள்.  விஷயம் இது தான், கூட வேலைப் பார்க்கும் பெண் தப்பான உறவு, ஒருவனை நம்பி மோசம் போய் விட்டாள். வீட்டிற்குச் செய்தித் தெரிந்து அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். எங்கே வசிப்பது, இனிமே வாழ்க்கை என்ன? பல விடைத் தெரியாத கேள்விகள். திக்குத் தெரியாத காட்டில் விட்டால் போன்று. கேட்டக் கதையை ஜீரணிக்க ஒரு நிமிடம் அவகாசம் தான் தேவைப்பட்டது ,மறு வினாடி, அவளை இங்கே நம் வீட்டிற்கக் கூட்டிக் கொண்டு வா என்று உத்தரவு இட்டாள்.இதே தான். இது போலவே தான், ஒரு நாள், சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்து முடிந்தது .அப்போது ஒரு பெரியவர் தனக்குத் தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்து உதவினார். இதோ இப்போது என்னுடைய முறை.   என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று பாடிச் சென்று விட்டார்ப் பாரதி, இப்போது "என்று தணியும் இந்தப் பெண்(ஏமாந்த) அநீதி" என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டு அந்தப் பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் .