Appu's Views
Thursday, September 30, 2021
நாள்
காலையில் எழுந்தவுடன் , உள்ளங்கையை விரித்து "காரகரே வசந்தே லக்ஷ்மி கரமூலே சரஸ்வதி கரமத்யே ஸ்தித கோவிந்த, பிரபா தே கரதர்ஷனாம் " இன்றைய நாள் இனியதாக முடிய வேண்டும் என்ற எண்ணத்துடன் " துயில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு துளசி மாடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் (இது பாட்டி சொல்லிக் கொடுத்தது) , பின்னர் சுவாமி அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். "சர்வே ஜனா சுகினோ பவந்து" உலகில் உள்ள எல்லா ஜீவ ராசிகளும் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அன்றைய நாள் தொடங்கியது .
முதல் நீர் ஆகாரம்,வெறும் வயிற்றில் , வெதுவெதுப்பான நீரில் தேன் எலுமிச்சை பழ சாறும் கலந்து குடித்தாள் . மனதையும் உடலையும் இலகுவாக அன்றைய யோகா பயிற்சிகள். மூச்சு பயிற்சி ஆன பிராணாயாமம்தை முடித்து விட்டு, அந்த பயிற்சிகள் தந்த அமைதியும், உற்சாகத்தையும் அனுபவித்து விட்டு, நடையும் ஓட்டமும் கலந்த அடுத்த பயிற்சிக்கு ஆயத்தம் ஆனாள் .
காலையில் இந்த இரண்டு உடற்பயிற்சியும் முடித்து விட்டால் அந்த நாள் முழுதும் தேவைக்கான சுறுசுறுப்பு கிடைத்து விடும். அடுத்து அவளுடைய detox ட்ரின்க், தினமும் ஏதாவது ஒரு பழம் கலந்த சாறு, இதில் கருவேப்பிலை, இஞ்சி தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும்.. காபி, டீ அருந்துவதை நிறுத்தி பல நாட்கள் ஆகி விட்டது. முதலில் கடினமாக இருந்தாலும் பின்னர் காப்பியா? தேநீரா? அப்படியென்றால்? என்ன என்று கேட்கும் அளவிற்கு .
ஆற அமர ஒரு குளியல், தோட்டத்தில் விளைந்து இருக்கும் பூ (பூஜைக்கு), காய், கீரை, அவற்றைப் பறித்து நன்கு அலசி வடிய கூடையில் போட்டு விட்டால் இவள் பூஜை முடித்து திரும்பி வருவதற்குள் அவை நறுக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.
சுமார் ஒரு மணி நீரை பூஜை, விளக்கு ஏற்றி அன்றைய விஷேச தினத்தைப் பொறுத்து நன்றாக ஒரு கோலம் போட்டு ,பிள்ளையார் வழிபாட்டில் தொடங்கி ஹனுமான் சாலிசா முடிவு பெறும். , பின்னர் நன்றாக நீர் அளாவி விட்டு, (கேழ்வரகு, சம்பா கோதுமை, பயறு , கம்பு, பாதாம் பொட்டுக்கடலை) எல்லாம் கலந்து வறுத்து அரைத்து தானே தயாரித்த வேண்டும் என்றால் மோரோ அல்லது பணங் கற்கண்டு சேர்த்து ஒரு சத்துணவு கஞ்சி.
தினம் ஒரு கீரை,இன்னும் ஒரு பச்சைக் காய் அல்லது கூட்டு, குழம்பு அல்லது ரசம் , இவை தான் சமையல். சொடக்கு போடும் நேரத்தில் சமைத்து முடித்து விடுவாள், அதுவும் பாட்டுக் கேட்டு கொண்டே. சில சமயம் உறவினர்களுடன் தொலைபேசி மூலம் அரட்டை .
பிறகு அன்றைய செய்திகளை இணையதளம் மூலம் படித்தல், மின்னஞ்சல்களை அலசி ஆராய்தல், முகநூல் நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து அல்லது பிற வாழ்த்துகள் பகிர்தல். ஓர் இரு புத்தகங்களையோ அல்லது மாத இதழ்கள் படித்தல் .
இதற்குள் வயிற்றுக்குள் மணி அடித்து விடும், களைந்து வடித்த சாதம், காலையில் செய்து வைத்த சமையல் ஒரு பிடி. "Eat like a prince " , அதாவது மதியம் நாம் சாப்பிடும் சாப்பாடு ஒரு அரசன் உண்டுவது போல் இருக்க வேண்டுமாம்.
அன்றைய தொலைக்காட்சி தொடர் பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் அவளுக்குப் பிடித்த ஒன்றை ஒன்று அது அவளுடைய தினசரி பொழுது போக்குகளில் ஒன்று, மிகவும் பிடித்த கதாநாயகன் நாயகி. பின்னர் ஒரு குட்டி தூக்கம், வைத்தியர்கள் கூறு படி , அப்படி ஒரு மத்தியான தூக்கம் உடம்புக்கு மிகவும் நல்லது .
சற்றே வெயில் தளர்ந்து பின்னர் செடிகளுக்கு களை எடுத்தல், நீர் பாய்ச்சி விட்டு கோவிலுக்கு தயார் ஆகி, கோவிலுக்கு ஒரு quick நடை, மேலும் ஒரு நடைப் பயிற்சி ஆயிற்று மற்றும் கோவில் சென்று வருவதால் ஆயிரம் நன்மை, அந்த positive vibes மிகவும் நல்லது. ஏன் விட்டு வைப்பானேன் ?
திரும்பி வரும் வழியில் நண்பிகளிடம் பேசி அலாவிட்டு, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஒரு tiffin , ஒரு டம்ளர் மோர் . ஆயிற்று, மறுபடி தூக்கம் தான் . ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம்.
தூங்கி எழுந்தால் மறுபடியும் ஒரு நாள் உங்களைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறது, இல்லை என்றால் "நாம் இல்லை என்று உலகம் அறிந்து கொள்ளும் நாள் அதுவாகவே அமையும்.
Wednesday, September 15, 2021
தொடர்ச்சி
அம்மா, அம்மா, வரும்போதே அம்மா புராணம்ப் பாடிக் கொண்டு வீட்டில் உள்ளே நுழைத்தாள் மதுவந்தி. கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. கடவுளே ஒரு மழைச் சாரலுக்கு பஞ்சம் வந்து விட்டதா? தயவு செய்து கருணை வேண்டும் பகவானே.
என்னடி என் கிட்டக் குறைக் கூறுகிறார் போல் ஸ்வாமி கிட்டேயும்ப் பெட்டிஷன் ஆஹ்?
நான் என்ன எனக்கு மட்டும் மா வேண்டுகிறேன் மழை வந்தால்ப் பூமிக் குளிரும், கொஞ்சம் இந்த வெயிலின் தாக்கம் குறையும். காபியைக் கொடு மா அப்புறம் வச்சுக்கோ உன்னுடைய வியாக்யானம்.
அப்புறம் சொல்லு, புது ஆபீஸ், புது பாஸ், புது டீம் லீடர், எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்? அதை ஏன் மா கேட்கிறாய், என்று ஆரம்பித்து அன்று நடந்த முழுக் கதையையும் சொல்லி முடித்தாள். பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மாவிடம் நடத்தையைக் ஒப்புவிப்பது ஒரு அலாதி சுகம்.
இப்படியாக அம்மாவைப் பெண் பாராட்டுவதும், பெண்ணை அம்மா பாராட்டுவதும் மூன்று மாதங்கள்க் கழிந்தன. அன்றும் இதே போல் ஆபீஸ் இருந்து வந்ததும் வராததுமாக தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தாள் மதுவந்தி .அவளாகவே கூறட்டும் என்றுப் பொறுமையாக இருந்தாள்.
இரவு உணவு முடித்து விட்டு,அம்மா உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் என்று பீடிகை மிகப் பெரியதாக இருந்தது. கேட்டுத் தான் பார்ப்போமே என்று செவிச் சாய்த்துக் கேட்டாள்.
விஷயம் இது தான், கூட வேலைப் பார்க்கும் பெண் தப்பான உறவு, ஒருவனை நம்பி மோசம் போய் விட்டாள். வீட்டிற்குச் செய்தித் தெரிந்து அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். எங்கே வசிப்பது, இனிமே வாழ்க்கை என்ன? பல விடைத் தெரியாத கேள்விகள். திக்குத் தெரியாத காட்டில் விட்டால் போன்று.
கேட்டக் கதையை ஜீரணிக்க ஒரு நிமிடம் அவகாசம் தான் தேவைப்பட்டது ,மறு வினாடி, அவளை இங்கே நம் வீட்டிற்கக் கூட்டிக் கொண்டு வா என்று உத்தரவு இட்டாள்.இதே தான்.
இது போலவே தான், ஒரு நாள், சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்து முடிந்தது .அப்போது ஒரு பெரியவர் தனக்குத் தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்து உதவினார். இதோ இப்போது என்னுடைய முறை.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று பாடிச் சென்று விட்டார்ப் பாரதி, இப்போது "என்று தணியும் இந்தப் பெண்(ஏமாந்த) அநீதி" என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டு அந்தப் பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் .
Monday, June 7, 2021
திதி
எப்போதும் போல் அன்று பொழுது புலர்ந்தது. வெளி உலக மக்களுக்கு இன்றைய நாள் புதிதாக விடியும் ஆனால் பல நாட்களாக, மாதங்களாக இந்த ஆறு அடி எட்டு அங்குல அறை அடங்கி ஒடுங்கி இருக்கும் நிலாவுக்கு இது இப்பவும் போல ஒரு நாள்.
நிலா, அது தான் அவள் பெயர், தாய் தந்தை எத்தனை சிலாகித்து இந்த பெயரைச் சூட்டி இருப்பார். வானில் என்றும் மிளிரும் ஒரே ஒரு நாள் தவிர , பதினைந்து நாளுக்கு ஒரு முறை தன்னை மேலும் அழகுடன் பிரகாசித்துக் காணப்படும் அதன் ஒளி வட்டமும் அது போல் என்றும் சிறந்து வாழ வேண்டும் என்று நினைத்துச் சூட்டி இருப்பார். அம்மா சாந்தா , அப்பா முகுந்தன் , தங்கை யமுனா, தம்பி கண்ணன் , இவர்களுடன் வாழ்ந்த அந்த நாட்கள் பொற்காலம்.
மிதிவண்டியில் அப்பாவுடன் பள்ளிக்குப் பயணித்த போது கதை சொல்லிக் கொண்டு வரும் வருவார் , அதே மிதி வண்டியை தானும் கற்றுக் கொண்டு தன்னுடைய தங்கை தம்பி கற்றுக் கொடுத்தது என்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. அது ஒரு கனாக் காலம், நிலா வீட்டிற்குப் பெரிய பெண் என்பதால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவளிடம் நிறைய இருந்தது. சில சமயம் இவள் அதனுடன் தான் பிறந்தாலே என்பது போல் ஐயம் ஏற்படும் . அதே போல் அவள் மற்றவர்களுக்கு உதவும் குணம் , தெருவில் உள்ள எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நிலா.
சிறை வாசம் என்று இதைக் கூறலாம், எப்போது இது ஆரம்பித்தது என்று தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தால். எல்லாம் நடந்து முடிந்து போயிற்று, போன வருடம் இதே போல் கத்திரி வெயில் காலம், காலை எப்போதும் போல தன்னுடைய கட்டாய தொழில்சார் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டு இருந்தால். அம்மாவின் எப்போதும் மணக்கும் காபி உடன் கிளம்பியாயிற்று, அன்று ஏனோ காலை இருந்து ஏதோ பெரிய விபரீதம் நடக்கும் போல் ஓர் அறிகுறி தென்பட்டு கொண்டே இருந்தது. தன்னை மீறி என்ன நடந்துவிடும் என்ற இறுமாப்புடன் கிளம்பி விட்டாள்.
அன்று எல்லோருக்கும் வருடாந்திர கட்டாய முழு உடல் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை சோதனை எடுத்தனர். அது முடிந்து எப்போதும் போல் தினப்படி வேளையில் மூழ்கிவிட்டாள் . இது நடந்து சில நாட்கள் பிறகு தலைமை மருத்துவர் கூப்பிடுவதாக ஒரு செய்தி வந்தது, நமது பாரத தான் கூப்பிட போகிறார் என்று ஒரு துள்ளலுடன் அவர் அறையை அடைந்தாள்.
அவர் சிறிது அல்ல பெரிதும் சோர்ந்து தென்பட்டார், தனக்குத் தான் அப்படித் தோன்றியதோ?
Hello டாக்டர். கூப்பிட்டிங்களா ?
வாம்மா , வந்து உட்கார்
வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கிறது.
going on good டாக்டர், எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. மனதுக்கு மிகவும் திருப்தி ஆக இருக்கிறது.
நீ இப்போது உன் பெற்றோர் உடன் தான் இருக்கிறாய் அல்லவா ?
ஆமாம் டாக்டர், எப்போது இவர் ஏன் இதை எல்லாம் கேட்கிறார்? கல்யாணத்திற்கு என்றால் இன்னும் குறைத்து இரண்டு வருடங்கள் இருக்கின்றன, மேல் படிக்க வேண்டும், நல்ல ஹாஸ்பிடல் சேர வேண்டும், தம்பி தங்கை நன்றாக படிக்க வேண்டும் அப்பாவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இப்படிப் பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அவள் முன் விழுந்தன. அப்போது அவளுக்குத் தெரியாது இவை எல்லாம் அடுத்து அரை நொடியில் சிதறி விழா போகின்றன என்று.
நான் இப்போது சொல்லப் போகும் செய்தி உனக்கு எத்தனை துன்பத்தைக் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும், வேண்டும் என்றால் நாளை உன் பெற்றோர் உடன் கலந்து பேசலாம்...
வேண்டாம் டாக்டர் ஏதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் தாங்கிக் கொள்வேன்,
உனக்கு வந்து இருப்பது புது வகையான தொற்று நோய். இதற்கு இன்னும் பெயர் சுட்ட படவில்லை, இதன் நோய்க் கிருமி கொண்டு தான் இதை அறிவர் . கிருமியின் பெயர் COVID-SARS . இதற்கு இன்னும் எதிர்ப்புச் சக்தி மருந்து இல்லை என்றே கூறலாம். இது ஒரு தொற்று நோய் என்பதால் உன்னை நீ உடனடியாக தனிமைப் படுத்த வேண்டும். நம் ஹாஸ்பிடல் ஒரு தனி அறையை உனக்கு ஒதுக்கி இருக்கிறேன்.
இப்படி அவர் கூறி இதோ இன்றுடன் இருபது நாட்கள் ஆகிறது. தொண்டை வலிக்கிறது, இருமல் வந்து கொண்டே இருக்கிறது. நிறுத்த பாடு இல்லை. சுவை இல்லை, நாசி இல்லை, வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறியக் கூட வாய்ப்பு இல்லை. கண்கள் குடும்பத்தை தேடுகிறது , அம்மா மடியில் தலை வைத்துப் படுக்க வேண்டும் போல் உள்ளது, இன்னும் எத்தனை நாள் இது தொடரும் ? முடிவே இல்லாத ஒரு பயணம் தொடர்கிறது.
யாரோ வருகிறார்கள், யார் என்று அறிய வாய்ப்பு இல்லை. உடல் முழுவதும் ஒரு விதமான suit அணிந்து வருகிறார்கள் . அவர்களால் அதைத் தரித்துக் கொண்டு எப்படிச் செயல்பட முடிகிறது? ஒரு செவிலியர் ஆக தன்னால் அவர்களுடைய கஷ்டம் புரிந்து கொள்ள முடிந்தது. அதையும் மீறி "இன்றும் அதே பல்லவி தான் பாடப்போகிறார்களா ? இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை , மருந்து ஏதும் கண்டு பிடிக்க வில்லை இதைக் கேட்டு கேட்டு காது புளித்துப் போய்விட்டது.
இன்றாவது நல்ல செய்தி வருமா? அந்த தானியங்கி கதவு கொண்டு திறந்து கொண்டு வருபவர்களுக்கு ஏங்கிக் கொண்டு படுத்துக் கிடந்தாள் . வந்தார்கள், வந்தவர்களிடம் புதிதாகத் தகவல் எதுவும் இல்லை. இப்படியே எத்தனை நாள் தான் கடப்பது? நிலாவிற்கு மிகவும் அலுப்பாக இருந்தது.
மறுநாள் அவர்கள் வரும்போது பெற்றோருடன் தொலைப்பேசியில் பேச இயலுமா என்றாவது கேட்க வேண்டும் . அவள் நினைத்தது அடுத்த நாள் "video call " அம்மா அப்பா விடம் பேச முடிந்தது, அம்மா சற்று வயது முதிர்ந்து காணப்பட்டாள் பாவம் கவலையால் இருக்கும் . ஆண்கள் அவ்வளவு எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள், அப்படிப் பட்ட அப்பா சற்று கண்கள் கலங்கினார் போல் காணப்பட்டார். நல்ல காலம் இந்த கொடுமையைத் தம்பி/தங்கை காணவில்லை .
அன்று ராத்திரி நிலா ஒரு முடிவு எடுத்துவிட்டால், இது தான் தக்க சமயம் . நம் இணைந்து எண்ணத்தை நிறைவேற்ற நாள் வந்து விட்டது. நல்ல வேலை அம்மா அப்பாவையும் பார்த்து ஆயிற்று.
மறுநாள் டாக்டர் வந்த பிறகுத் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். முடியவே முடியாது என்று கூறிவிட்டார் . தர்மத்தைத் தாண்டி தன தொழிலுக்குத் துரோகம் செய்வது கடினம் என்று கூறி விட்டார். அவர் கூறுவதை விட்டுவிட்டு அப்படியே போகிறவள் இல்லை நிலா, விடப் பிடியாக நின்றாள் . வேறு வழி இல்லாமல் அவள் தினமும் படும் பாட்டை பார்த்து அவரும் எத்தனை நாள் தான் தாங்கிக் கொள்வார்.
ஒரே ஒரு ஊசி, இதுவே இது வேற ஊசி ஆகி இருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கும், நேற்று நம்முடன் இருந்த நிலா இன்று மறைந்து விட்டாள். எதச்சையாக இன்று அமாவாசை - வானில் என்றும் மின்னும் நிலா அன்று ஒரு நாள் மட்டும் மறையும்.
Friday, May 28, 2021
Subscribe to:
Comments (Atom)
