Monday, October 26, 2020

குழந்தை வளர்ப்பு 

 "ஈன்ற பொழுதினில் தன மகனே சான்றோன் எனக் கேட்ட தாய்". 


எனக்  குறள் கூற , ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஒரு எதிர்ப்பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளை,  தங்களை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி வளர்த்து வருகிறார்கள். மணி மணியாக நான்கு குழந்தைகளில் தாய் ஆகிய நான் உங்களிடம் சில குழந்தை வளர்ப்பு கூறுகள் பற்றிக் உங்களிடம் ஒரு தோழியாகப் பகிர  விரும்புகிறேன். 

முதலில் குழந்தைகளிடம் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள். நாம் சிறு வயதில் கற்றுக் கொள்ளாததை  நம் பிள்ளைகள் கற்க  வேண்டும் என்று எண்ணம் கொண்டு அவர்களை அந்த, இந்த என்று எல்லா வகுப்புகளில் சேர்க்காதீர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து கொண்டு செயல் படுங்கள். இது அவர்கள் தேர்ந்து எடுத்த பாதையில் அவர்களை முன்னேற்றி செல்ல உதவும். 

அவர்களிடம் நிறையப்  பேசுங்கள் , சின்ன சின்ன விஷயங்களுக்குச் செவி சாயுங்கள், தினமும் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் "எப்படி இருந்தது இந்நாள் ? இன்று  பள்ளியில் என்ன சுவாரஸ்யமாக நடந்தது என்று வினவுங்கள். இரண்டு ஓர் நாள் செய்து பாருங்கள், மூன்றாம்  நாள் அவர்களே "அம்மா என்று என்ன நடந்தது தெரியுமா??" என்று ஆவலோடு கூவிக் கொண்டே வருவார்கள். 

ஆண் பிள்ளைகளிடம் பெண் பிள்ளைகளை மதிக்கச் சொல்லி வளர்த்து விடுங்கள் . பெண் பிள்ளைகளைத் துணிவோடும் அவர்கள் தனித்துவமாக எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தைச் சிறு வயதிலிருந்தே விதைக்க வேண்டும். இது அவர்களை எந்நேரமும் மிகவும் தைரியமாக எந்த சூழ் நிலையையும் சவாலோடு சந்திக்க இயலும். 

அவர்களிடம் அன்பு கொள்ளுங்கள், அதே சமயம் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். ஆனால் அந்த கண்டிப்பு ஓர் நாளும் நம்மிடையே பயம் கொள்ளக் கூடாது , அந்த பயம் பிற்காலத்தில் சில விசயங்களை மறைக்கக் கூடியதாக அமையும். மிகவும் சிந்தனையுடன் செயல் பட வேண்டும். அவர்களிடம் நிறைய நேரம் செலவு செய்யுங்கள், விளையாட்டில் போட்டா  போட்டி , சுற்றுலா செல்லுதல், பல நினைவுகளுக்கு இது  வித்தாக  அமையும். கதை கூறி வளர்க்க வேண்டும் இது  அவர்களின் கற்பனை திறனை வளர்க்க உதவும். 

தேக ஆரோக்கியம், சத்தான உணவு வழக்கம் முறையை அவர்களிடம் பேசுதல் வேண்டும். அவர்களுடன் தியானம், யோகா பயிற்சி, சிறு உடற்பயிற்சி சேர்ந்தே செய்து பழகுங்கள்.

என் நேரமும் அவர்கள் மேல் நாம் நம்பிக்கை இருத்தல் வேண்டும் . தப்ப செய்து இருந்தாலும் அவர்கள் நம்மிடையே அதைப் பகிர்தல் வேண்டும் , எந்த ஒரு சூழயலிலும் நம்மைத் தான் முதலில் அணுக வேண்டும், அந்த நம்பிக்கையை நாம் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 

கூச்சம் இல்லாமல் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ப நாம் அவர்களிடம் உரையாடல் கொள்ளுதல் வேண்டும் , இது வீண் சந்தேகங்கள் , நண்பர்களிடம் இருந்து தவறான கருத்த்துக்களுக்கு  வராமல் இருக்க ஏதுவாக இருக்கும் . முதன்மையான தகவல் நம்மிடம் இருந்து தான் வர வேண்டும். எந்த கடவுள் வழிபாடு ஆக இருந்தாலும் சரி தெய்வீக வழிபாடு, நம்முடைய பண்பாடு , சம்பிரதாயங்கள் , சாஸ்திரங்கள் கூறி வளர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரு தலைமுறையே அழிந்து விடும் . அதனின் விழுமியங்கள் கூறி வளருங்கள் . 

நம்மைச் சார்ந்தே அவர்கள் இருக்கக் கூடாது. நாம் இல்லை என்றாலும் அவர்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களைச் சிறு வயதிலிருந்தே அவர்களைத் தயார் செய்வதோடு தனியாகவும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.பண விஷயம், சிறு சிறு அன்றாட வீடு வேலைகள் பழகி விடுங்கள் பின்னாளில் , சிறிய வேலைகள் கூட தெரியாமலும் , அதுவே பெரிய வேலையாகவும் தோன்றும். 

அவர்களின் வெற்றியை எவ்வாறு கொண்டாடுகிறோமோ அதே அளவு அவர்களின் தோல்விகளை அவர்களுக்குச் சந்திக்க ஊக்குவிக்க வேண்டும் , அவர்களை மனது அளவில் தயார் செய்தல் வேண்டும். முறையான ஒரு அணுகு வழியை நாம் அவர்களுக்கு சொல்லி தர வேண்டும். 

அவர்கள் நம்மை கூர்ந்து கவனித்து கொன்டே இருப்பார்கள்.நமது பிரதி பிம்மங்கள தான் அவர்கள் வளருவார்கள். ஒவ்வொரு செயலையும் நாம் மிகவும் கவனமாக எடுத்து வைத்தல் வேண்டும்.  கணினியில் நேரம் செலவு செய்தல், கைபேசியில்  நேரம் செய்தல், நண்பர்களிடம் பேசுதல் இவை எல்லாம் இதில் அடங்கும்.  பெற்றோராக நமக்கு இது தான் தலையாய கடமை.

மொத்தத்தில் அவர்களிடம் ஒற்ற தோழனாகத் தோழியாக  இருங்கள், அப்பறம் என்ன "என் அப்பா, அம்மா போல் இவ்வுலகில் இல்லை என்று அவர்களே உங்களைப் போற்றி கூறுவார்கள்"

Thursday, September 17, 2020

Be in "Thy shoes "





 A phone encounter during this pandemic made me write this episode. 

Other day I was on the phone with my friend, other end I could hear her cringes about "online School" for young kids and a comparison between two siblings. I was just explaining to her the elder kid has been exposed to online school at the age of ten while the younger has been given this at tender age of six or seven. Imagine the plight, for the children, it is just another toy to play with. He or she is not going to sit through the class and listen all the more concentrate enough to understand and reciprocate. 

 In life we face many problematic situations. Allow me tell you how I analyze the same situation and find solutions. I substitute myself for the person who is facing difficulty, what if It had been me ? What would I have done if I was at that age ? What exposure would I have received? The same goes vice versa too. If you are accusing one of not accomplishing or not achieving? Had it been myself would I have completed it? Think at another person's length and then arrive at a decision. 

In the above example I cited, I am just analyzing the situation from a six year child point of view. You have given me a toy, I haven't had it before or hardly knew anything about it. Before even I can understand all about it, you are asking me to play with it. As a parent we are understanding the mental blockage, all the more , we want them to work on it at the earliest. Another important point to be noted, that same toy can be used for playing as well as learning. But a child being a child chooses the first instead of the later. His/her brain is not yet developed. We are coercing it . 

Think of it this way, you are given a tool at this age itself and you don't know the dynamics of that tool, but your employer or your family wants you to produce a product out of it. Will it be even possible?    

 Hardly I have met such people during my lifetime, who analyze it this way. Look into your life from a different angle. You will be amazed at the results. 

Wednesday, July 29, 2020

The New "Norm"




A new phrase we are often hearing now. Other day my friend told me I have heard this phrase more in the last month. You too ??? Are we all ready for it? Are we actually ready to face it? Fear of life, Fear of disease? What it is it actually? Will we be able to overcome it ? 


When it comes to the future everyone wants to know what they will be in the next twenty years or so, will they be the owner of a house, getting married, work, etc and there will be a safer side they will willingly ignore. It's all our hope that we will live up to it. Nobody wants to know their last day. As read very few have predicted their "last day on earth" .


Fear of this virus has crept over us whether you like it or not. According to recent news it is here to stay with us for a decade or so. We have to live with it. We have to prepare ourselves slowly and steadily.  Are you ready to come out of your own Igloo? Time now comes to raise another question: Apart from all the cleaning and sanitizing that we all have made it as a part of everyday life, is a face covering "Mask" enough?


Post Covid era how the world is going to change? Jokingly many say AC/BC, (After Covid/Before Covid). Whole World will change as a post war period. One thing is for sure our priorities are going to change.  Spending money, family connection, bond, survival, many variables that will decide our everyday life. 


Was this the same post Swine flu,SAARC, or Plague? Didn't we bounce back? for sure we did. The world did. Let's all join hands together, be in help whenever needed, let's make use of the best resources available. ask for help, try to help people in the simplest way possible. Within ourselves we all have a bounty of energy left to explore. Believe it  "Adaptation" is already pre-programmed in all human brains.  

Wednesday, July 8, 2020

ஆசை



ஆசை


உன் கைக்குள் என்னை சிறை வைத்து பாதுகாக்கும் தாயே ,
என்னை விட்டு விடு ,
அந்த பறவை போல்  சிறுகு ஒடித்து இந்த பூமியை ஒரு வலம் வந்து
 மறுபடியும் உன் கைக்குள்ளே சிறை அடைகிறேன்

அவர்கள் 




அவர்கள்
 
இன்று மோகனின்  பிறந்த நாள், அதற்காக விழா  ஒன்று ஏற்பாடு செய்து இருந்தான்.. சுந்தரம் தன்னை தயார் படுத்தி கொண்டு அங்கு சென்று அடைந்தான். உணவு மற்றும் பல விதமான பான வகைகள் தயாராக இருந்தது . இன்னிசை கச்சேரி தொடங்கியவுடன் விழா களைகட்டியது. விழா நடந்து கொண்டு இருக்கட்டும்," நாம் சற்றே மோகன் மற்றும் சுந்தரம் பற்றி ஒரு முன்னோட்டம் காண்போம்." 
 
மோகன் மற்றும் சுந்தரம், விடுதியில் தங்கி ஒன்றாக படித்து வந்தவர்கள், உயர்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் அந்த கல்லூரியில் தன் உயர்நிலை படிப்பை தொடர வந்து சேர்ந்தான்.  சுந்தரம் ஒரு தனியார் நிறுவனத்தில் சார்பாக அங்கு படித்து கொண்டு இருந்தான். முதலில் சற்றே விலகி இருந்தாலும் நண்பர்கள் இரண்டு பெரும் சிறிது காலத்து பின்னர் , இணை பிரியாத நண்பர்களாக மாறி  இருந்தனர்,  சற்றே நெருங்கியும் பழகினர். படித்து முடித்த பின்னரும் தங்கள் நட்பை தொடர்ந்தனர். மோகன் தன் திறமையால் ஒரு நிறுவனத்தை தொடங்கினான். இருவருக்குமே   பணமும் நட்பும் சேர்ந்து வாழ்கையை இனிமையாக்கியது.
 
"நம்மை தொடர விடாமல் அங்கு விழாவில் ஏதோ அமளி தென்படுகிறது. "
 
அங்கு மோகன் மயங்கி விழுந்து இருந்தான். வெகு விமர்சையாக  விழா முடியும் தருவாயில் இப்படி ஒரு அசம்பாவிதம்  . டாக்டர் பல பரிசோதனைகளை செய்தார். ஒரு நாள் மட்டும் மோகனை ஆய்வு செய்து விட்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டனர். 
 
அன்று நண்பர்கள் இரண்டு பேரும், ஒரு கடையில் காபி அருந்தி  கொண்டு இருக்கையில், மோகனுக்கு ஒரு போன் கால் வந்தது. ரத்த  பரிசோதனை பேரில்  அவனுக்கு ஹெயச்ஐவி/எய்ட்ஸ்  இருப்பதாக டாக்டர்  சொல்லி இருக்கிறார்.சுந்தரம் அதிர்ந்தான் . ஏன்? அவனும் மோகனும் ஈர்  உயிர் ஓர்  உடல்.
 
(கலாச்சாரம் பெருகி வரும் இக்காலத்தில் ஹெயச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வு கதை.- இனிமேலாவது நம் பாரம்பரியத்தை போற்றுவோம், காப்போம் . )
 
அபர்ணா ஸ்ரீராம்.

Wednesday, May 20, 2020

அது ஒரு கனாக் காலம் 

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

Tick Tock Tick Tock

google
How well do we all manage time? Twenty four hours in a day is not enough for many. Ever heard about an old joke? Days are going get longer, sure not talking about "DST". Right from we get up in the morning till we go to bed at night, we have many many jobs, duties & responsibilities to accomplish. It is not all the same for everyone. The next day, it starts all over again, the same set or rather totally a different one. 
Allow me to go further down the road with you all to speed this up.
Many preachers ask to line up your "things to do" for next day, it's easy to check off once you finish. But, to start listing may be a chore for some. Well, let's explore one more option. Be precise, plan to do same job at the specific time of the day every day or sometimes every week. In the end before you realize job gets accomplished.
Besides, all this, once all other tasks are finished, we have to set aside some time for ourselves too, allocate your time, reading a book, listening to music, writing/posting a small note or having a long chit- chat with one of our family/friends.
Remember, time and tide waits for none. Today is your day.

Culture of India

Indian culture has its own pride . It subsist of architecture, languages spoken, Music, food & customs. 
According to recent census there are about 19,500 mother tongue languages spoken across India.
The Eighth Schedule of the Constitution consists of the following 22 languages – Assamese, Bengali,
Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi,
Sanskrit, Sindhi, Tamil, Telugu, Urdu, Bodo, Santhali, Maithili and Dogri.
Tamil one of India's major classical languages, descends from Proto-Dravidian languages spoken around t
he third millennium BCE in peninsular India. 


Dance and music first emerged as part of festivals and religious worship and of dramatic arts in India.
The oldest archaeological evidence of dance exists in the form of pictures and sculptures
dating from about 2500 B.C. Because of their close links with religion and ritual, dances are mentioned
in the Vedas too. 
At one point of time, both dance and music,  became connected with drama. The earliest written work
dealing with all aspects of music and dance was the Natyashastra (Handbook on Dramatic Arts).
A legend says that this text was composed by a wise old man named Bharatamuni.
Many of India's classical dance styles are descended from styles described in this book. 
With the first period of Muslim rule in India in the 1200's, music became split into the northern tradition of
Hindustani music and the southern tradition of Carnatic music. Amir Khusrau (1253-1325) was the first
great composer-musician of Hindustani music. The greatest composer-musician of Hindustani music was
Tansen, a vocalist and instrumentalist at the court of Akbar in the 1500's. The most outstanding
composer-musicians of Carnatic music were a group of three musicians during the early 1800's called
the Trinity--Shyama Shastri, Tyagaraja, and Muthuswami Dikshitar.

The term raga is most vital for Indian classical music. In the 13th century, the theorist Sarngadeva
has written the large Sangitaratnakara with 264 ragas. Indian folk music are formed with several regional
or local music forms. It is basically performed in various festivals in different parts of India.
Some important music forms of this type are Bihu music of Assam, Bhangra music in the Punjab,
Dandiya dance music in the Punjab , Lavani music of Maharashtra, Rabindra Sangeet of West Bengal,
Theru Kuthu in Tamil Nadu. 
Here are five major styles of classical dance in India:
1) Bharata Natyam, (2) Kathak, (3) Kathakali, (4) Manipuri, and (5) Orissi.
Each of these styles developed in a specific region of India. They differ in their languages of gesture.
But they are all founded on the principles of rasa and they all draw upon stories and poems that tell
about the lives of the Hindu gods. These include gods such as Shiva, (the god of the dance), Krishna,
and many more. 


Temple also called Mandir or Kovil, considered as significant place of worship. It almost a daily observance of
people in India to visit temple on major festivals and regular days. Temples are also structure of architecture in
many states. Vaishno Devi , Kedarnath, Badrinath, Golden Temple, Tirupathi Balaji , Sabarimala, Konark Hindu,
Khajuraho , chola temple in South India to name a few famous temples throughout India. Of these,khajuraho,
chola and konark stands as UNESCO world heritage sites.   




Adi Shankaracharya was an early 8th century Indian philosopher and theologian who expounded the doctrine
of Advaita Vedanta. He is credited with unifying and establishing the main currents of thought in Hinduism.
Seven principles of Adi Shankarcharya, Ganapathyeem,Kowmaram, Sowram, Vaishnavam,Shaivam & Shaktham. 


India has one of the oldest civilizations on the planet,with the most diverse cultural history and inhabited by
multiple races, religions, and languages is a goldmine for the study of architectural evolution throughout history.
One can easily see the different architectural styles reflecting in the buildings all over the country. This unique
development of assimilating a wide variety of cultures enables us to learn how such a diverse society has
evolved. The most iconic yet totally independent and different architectural masterpieces have their own
style of architecture. These styles were developed according to the geological conditions, cultural inclinations
as well as technological advancements in their own era.
In the words of Mark Twain,
“So far as I am able to judge, nothing has been left undone, either by man or nature, to make India the most
extraordinary country that the sun visits on his rounds. Nothing seems to have been forgotten,
nothing overlooked.”
Indian cuisine is known for its large assortment of dishes. The cooking style varies from region to region and
is largely divided into South Indian & North Indian cuisine. India is quite famous for its diverse multi cuisine
available in a large number of restaurants and hotel resorts, which is reminiscent of unity in diversity.
The staple food in India includes wheat, rice and pulses. 
 
There is hardly any culture in a world that is as varied and unique as India. India is home to some of the most
ancient civilizations, including four major world religions, Hinduism, Buddhism, Jainism and Sikhism.
India also sees a large number of festivals, mainly because of the prevalence of diverse religions and groups.
The Muslims celebrate Eid, the Christians have Christmas, Good Friday, the Sikhs have Baisakhi , and
the Hindus have Diwali, Holi, Makar Sakranti, the Jains have Mahavir Jayanti, the Buddhists celebrate
the Buddha Poornima, and quite honestly, the number is endless. All of these translate to holidays in our book,
of course.
India is well known for its film industry, which is often referred to as Bollywood. The country's movie history began
in 1896 when the Lumière brothers demonstrated the art of cinema in Mumbai. 
Today, India is a very diverse country, with more than 1.2 billion people.Language, religion, food and the arts
are just some of the various aspects of Indian culture.  The South, North, and Northeast have their own distinct
cultures and almost every state has carved out its own cultural niche. Let’s embrace it all together, sustain and
lead it for future generations. JAI HIND.
Aparna Sriram 

மஞ்சள் மகிமை 

"அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்"
Raw turmeric • Poongodi's Kitchen




அல்சைமரை தடுக்கும் மஞ்சள்


தெற்காசிய நாடுகளின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் ஏற்கெனவே நன்கு அறியப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வின் முடிவுகள் புதிய தகவல்களை கண்டறிந்துள்ளன.

அதாவது விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட் பொருள், அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்களை குணப்ப டுத்தும் தன்மை கொண்டது என்று அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்திய உணவு வகைகளில் மஞ்சள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது

அதாவது மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முரளி துரைசாமி.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை தங்களது உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்கு வதற்கான வாய்ப்புகள் குறைவதாக அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும், மனிதர்கள் மத்தியில் அடுத்த கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புற்றுநோய், மூட்டுவாதம் உள்ளிட்ட நோய்களை தடுப்பதில் மஞ்சளுக்கு இருக்கும் பங்களிப்பு குறித்து ஏற்கெனவே ஆய்வுகள் நடந்துவரும் நிலையில் மூளை அழுகல் நோயை தடுப்பதிலும் மஞ்சள் முக்கிய பங்காற்றலாம் என்கிற செய்தி மஞ்சளை தினமும் தங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியாக இருக்கும்.
மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை(தமிழில்)


"இன்னைக்கி என்ன அப்பா சமையலா?"என்று கேட்டுக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தன குழந்தைகள்.

"எப்படித் தெரியும்?"என்று கேட்மேன்.

"அதான் பருப்புக் குழம்பு மஞ்சள் கலரா இருக்குதே"என்றாள் மகள்.

அதென்னமோ தெரியலை. எனக்கு மட்டும் மஞ்சள் பொடி போடும் போது கை நடுங்கி நிறைய விழுந்துவிடுகின்றது.

சரி, குழம்புக்கு கறிக்கும் நிறம் வருவதற்காக மஞ்சள் சேர்க்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். மஞ்சளுக்கு நிறம் மட்டுமல்ல, மணமும் உண்டு, குணமும் உண்டு.

கையிலோ காலிலோ விளையாடும் போது காயம் பட்டுவிட்டால் உடனே அம்மா சிறிது மஞ்சள் பொடியை காயத்தின் மீது தூவி சேலை முந்தானையைக் கிழித்து ஒரு கட்டுப் போட்டு விடுவாள். ரெண்டே நாட்களில் காயம் குணமாகிவிடும். பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் அரைத்து உடம்பெங்கும் தேய்த்துக் குளிப்பார்கள். இதனால் தேவையில்லாத இடங்களில் மயிர் முளைப்பது கட்டுப்படுகின்றது என்பது மட்டுமல்ல, கொப்புளங்களும் பருக்களும் வருவதில்லை. சருமமும் பொலிவு பெறுகின்றது. சுமங்கலிப் பெண்களின் சின்னமான குங்குமமும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டது தான்.

12 Benefits Of Kasthuri Manjal & How To Use It

இப்போது புற்று நோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தரப்பயன்படும் மஞ்சள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய புரதத்தை தடுக்கக் கூடியது என்கிறார்கள். மஞ்சளினால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை புற்று நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதனைக் கூடங்களில் செல்வளர்ச்சி மூலம் ஆராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். இந்த ஆராய்ச்சி முறைப்படி விரும்பி முன்வரும் புற்று நோயாளிகளுக்கு CUR CUMIN எனப்படும் மஞ்சள் பொருளால் செய்யப்பட்ட 500 மில்லிகிராம் மாத்திரைகளை ஒரு வாரத்திற்குக் கொடுத்து அது NF KAPPA B என்னும் புரதத்தைச் செயலிழக்கச் செய்கின்றா என்று பார்ப்பார்கள்.
இந்தப் புரதம் தான் உணவுக் குழாயில் புற்று நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாகின்றது. லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் விரைப்புற்றுநோய், சருமப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

மனிதர்களிடம் நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகள் மூலம் அல்ஸெமிர் எனப்படும் நினைவிழப்பு நோய்க்கு ஒரு மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வேறு சில விஞ்ஞானிகளோ மஞ்சளில் வீக்கத்தை வற்றச் செய்யும் பண்பு இருப்பதால் அதைக் கொண்டு CROHN நோய் எனப்படும் குடல் நாளநோய் வராமல் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆசியக் கண்ட நாடுகளில் வசிக்கும் மக்களிடையே இத்தகைய நோய்கள் குறைவாக இருப்பதால் மஞ்சள் கலந்த கறி காரணமாக இருக்குமா என்று ஆராயப்பட்டது. தொண்டையில் நீண்டகாலம் வீக்கம் இருக்கும் போது தொண்டைச் சுவரில் உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இத்தகைய நிலை உள்ளவர்களில் 10 விழுக்காட்டினருக்கு புற்றுநோயாக மாறுகின்றது. இது BCRECஇன் உணவுக் குழாய் புற்று நோய் எனப்படுகின்றது. இப்போது புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு உள்ள வெவ்வேறு பொருட்கள் எவ்வாறு புற்றுநோயை உண்டாக்கக் கூடிய NF-KAPPA B என்ற புரதத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை ஸ்வான்ஸீ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். புற்று நோய் எதிர்ப்புப் பண்வு உள்ள பொருட்களில் மஞ்சள் முக்கியமானது.

இதற்காக கறிமசாலா கலந்த உணவை உண்டுவிட்டு கூடவே ஒயின்குடித்தால் பயனில்லை என்று GAREIT JENKINS என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். உங்களுக்குத் தான் தெரியுமே மேலை நாட்டவர்கள் உணவு உண்பதற்கு முன்பு சிறிது ஒயின் குடிப்பார்கள் உணவு உண்டுகொண்டே நடுநடுவே ஒயின் குடித்து தொண்டையை நனைப்பார்கள் கடைசியாக உண்டு முடித்த பிறகு ஆங்கிலத்திலே WASHING DOWN என்பார்களே. அதாவது தொண்டையிலே இருக்கின்ற உணவை உள்ளே இறக்குவதற்கா ஒயின் குடிப்பார்கள். நீங்கள் என்னதான் மஞ்சள் மஞ்சளாக கறி செய்து சாப்பிட்டாலும் குடிமகனாகிவிட்டால் தொண்டைப் புற்றுநோய் உங்களை தாக்காமல் விடாது.
மேலும் மஞ்சள் கலந்த மசாலா உணவு வேண்டும் என்பதற்காக தினமும் மஞ்சல் தின்று கொண்டே இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால் பல மசாலா உணவுப் பொருட்களில் குறிப்பாக இந்திய உணவுகளில் ஏராளமாக கொழுப்புச் சத்து கலந்துள்ளது. தினமும் நிறைய இந்த உணவு உண்டால் இதய நோய் வரலாம் என்கிறார் டாக்டர் ஜென்கின்ஸ். ஆகவே கொழுப்புச் சத்து குறைவாக உள்ள உணவில் மஞ்சல் கலப்பது அல்லது மஞ்சளை மாத்திரையாக தயாரித்து உட்கொள்வது நல்லது என்று கருதப்படுகின்றது.
மஞ்சளில் அடங்கியுள்ள
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 349 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 13.1 கிராம்
புரதம் (Protein) 6.3 கிராம்
கொழுப்பு (Fat) 5.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 3.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.6 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 69.4 கிராம்
கால்சியம் (Calcium) 150 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 282 மி.கி
இரும்பு (Iron) 67.8 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 278 மி.கி
செம்பு (Copper) 0.39 மி.கி
மாங்கனீசு (Manganese) 8.38 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 2.72 மி.கி
குரோமியம் (Chromium) 0.069 மி.கி
கரோட்டீன் (Carotene) 30 மை.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 2.3 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 18 மை.கி
மஞ்சள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ஈரோடுதானே!
இல்லை எங்களுக்கு “மஞ்சக்காட்டு மைனா எனைகொஞ்சி கொஞ்சிப்போனா” என்ற நினைவென்றால் நான் பொறுப்பல்ல.
“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”
“மஞ்சளும் குங்குமம் கொண்டதாமரைப்பூ பேரின்பஓடையில் தள்ளாடுது”
“மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
“மஞ்சள் அரைக்கும்போதுமதிலேரிப்பாத்த மச்சான்
பக்கத்தில் வந்தாலென்ன சொந்தம் காண”என்று சிலருக்கு
பாடத் தோன்றலாம்.மஞ்சளைப்பற்றிப்பாடாத கவிஞர்கள்
இருக்கமாட்டார்கள்.

மஞ்சள் எனில் மங்களம். மஞ்சள் இல்லாத பண்டிகை எதையும் தமிழரிடத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.

தென்னிந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட
மஞ்சளானது ஈரோடு கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்
அதிகம் விழைகிறது,ஈரோட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

பருத்தி,கரும்பு போன்று
மஞ்சள் பெரிய அளவில் வியாபாரப்பொருளாகும்.ஈரோட்டில் இதற்கென மஞ்சள்மண்டிகள் நிறைய உள்ளன.சமீபத்தில்கூட ஈரோட்டில் “மஞ்சள் வளாகம்”ஒன்று துவங்க முதல்வர் அவர்கள் அடிக்கல்நாட்டியுள்ளார்.

மஞ்சள் பூமிக்கடியில் விழையும் கிழங்குவகையைச்சார்ந்தது.வெட்டி எடுக்கப்படும் கிழங்கை மாட்டுசாணிப்பாலில் ஊரவைத்து வேகவைத்து
பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.இதுவே கறிமஞ்சள் ஆகும்.

கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் &பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள்,சோப்புகள்,தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன.மற்றபடி மஞ்சள் போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.


எனவே இன்று நம்ம ஊர்மஞ்சளைப்பற்றிக்கொஞ்சம்...

மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும்,குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும்,
சுவையின்மை போக்கும்,

வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும்,தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,Chronic skin eruptions ]

மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.[மஞ்சள் சேர்த்து செய்யப்படும் குளியல் கலவைத்தூள் செய்முறை பின்னர் தருகிறேன்.]முகப்பருக்களை நீக்க உதவும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது.

மேலும் மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமைபற்றி
பத்மா[தேன் துளி] அவர்களின் கட்டுரைப்பதிவினை மக்கள் ஏற்கனவே அறிவீர்கள்.இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளைசேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]

கால் ஆணிக்கு = கொஞ்சம்மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி
இலை +கற்பூரம் சிறிது>இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டி
வர குணமாகும்.


Golden Turmeric Milk (Haldi Doodh) Step by Step - Whiskaffair
பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.
முகப்பருக்களையும்,அழகைக்குறைக்ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்க்கு உள்ளதால்
மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆண்மக்களே மறக்கம மஞ்சளை சமையல்ல சேத்துக்கங்க!

எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர்
வழக்கம்.
இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால்
மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.

இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும்
பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன்
நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள்
தெளிவாக அறிந்திருந்தனர்.
அபர்ணா ஸ்ரீராம் . 

விட்டாச்சு லீவு ......



கோடை விடுமுறை வந்து விட்டால் போதும், பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் தான். வேலை செய்யும் பெற்றோர்களுக்கு  எந்த கேம்ப் இல் போடுவது, குறித்து ஒரு விவாதம் வந்து போகும் ,  சில பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பர். சிலர் தாய்நாடு சென்று வருவர். இந்த இரண்டரை மாதத்தை, (அமெரிக்காவில்) செலவிடு செய்வது மிக பெரிய காரியமாக  போதும் போதும் என்று ஆகி விடும்.

முந்தைய வாரம் நாங்கள் எங்கள் நண்பர் குடும்பத்துடன் பித்ஸ்புர்க்ஹ  மாகாணத்திற்கு சென்று இருந்தோம், பிர்தேயமாக, தொலைக்காட்சி பெட்டி இல்லாத வண்டியில், சென்றோம்.பயண நேரமோ ஆறு மணி நேரம், கிளம்பிய  சிறிது நேரத்தில் , பிள்ளைகள் புத்தகம் படித்தனர், வீடியோ கேம் விளையாடினர்,தூங்கினர், நேரம் சென்ற பாடு இல்லை, இடமோ  வரவில்லை, அவ்வளவு தான்   "போர்" அடிக்கிறது என்றனர், சில விளையாட்டு சொல்லுங்கள் அம்மா என்றனர். 
Nyabagam varuthae - YouTube 

எனக்கு ஞாபகம் வந்தது ஏன் பிள்ளை  பருவம், இப்படி நெடிய தூரம் பயணம் செல்ல விடினும், பொழுது போக்குக்கு என்ன செய்தோம், என்று யோசிக்க வெய்தது. அம்மாவை தொந்தரவு செய்யாமல் தம்பி தங்கைகளுடன் என்ன செய்தோம்? என்ன விளையாடினோம்?  நீங்களும் சிந்தியுகள், பட்டியல் இட தொடங்கலாமா? 

இதோ ஏன் எண்ணங்களும், உங்கள் எண்ணனும் நேர் கொட்டில் இருக்கிறது என்று பார்போமா?

Street Cricket Stock Pictures, Royalty-free Photos & Images ... 
ஆண் பிள்ளைகள் முக்கால்  வாசி வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவர். நாம் சென்று அழைத்தால் தான் வீடு வந்து சேருவர், அனால் அது எப்படி தான் தெரியாதோ சாப்பாடு நேரம் மட்டும், சரியாக வந்து விடுவர். அவர்களுக்குள் தெரு போட்டி, நகர போட்டி, எல்லாம் நடுக்கும். சில ஆண் பிள்ளைகள் கில்லி, கோலி, பம்பரம், விளையாடுவர், ஒரு ஒரு  விளையாட்டும் , அதற்கு இதமாக மிக சுவாரசியமாக இருக்கும்.  சில பேர், மொட்டை மடியில் சென்று பட்டம் விடுவர், அதற்கு மாஞ்சா என்ற ஒரு பிசியை தயாரிப்பர், அதில், கண்ணாடி துண்டுகள், ஏனைய பொருள் சேர்த்து அதை தாங்களே  தயார் செய்வர். இதிலும் , டீல் விடும் போட்டி நடக்கும். எப்போது இதை  தடை செய்து விட்டனர் என்று கேள்வி, உயிர்க்கு ஆபத்து என்றால் தடை செய்வது நல்லது. இது  போதாதா நேரம் சிலவழிக்க, இது தவிர , குரங்கு பெடல் அடித்து, மற்ற நண்பர்கள் உதிவியுடன் , சைக்கிள் ஓட்ட கற்று கொள்வது, தோப்பிற்கு சென்று திருட்டு மாங்காய்  அடித்து சாபிடுவது... நேரம் ரெக்கை கொட்டி கொண்டு பறந்து விடும்.

Manja menace: Why can't you fly kites just for fun?

பெண் பிள்ளைகள்  கூடிய மட்டும்  வெளியே செல்ல மாட்டார்கள், அப்படியே சென்றாலும், இருடிற்கு முன் வீட்டிற்கு வரவும் என்ற ஒரு சொல் , சொல்லாமலே வரும். தனது விட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தில்  உள்ள தோழி விட்டிலோ, விளையாடுவர். அப்படி என்ன தான் விளையாட முடியும் நான்கு சுவர்களுக்குள், மேலே படிப்போம், ....
Pallanguzhi (traditional game of south india) | Planet Surprises
பல்லாங்குழி என்று ஒரு சோழி  விளையாட்டு உண்டு, வெள்ளை கலந்த பழுப்பும் நிறம் கொண்ட  சோழிகள், பார்கவே மிக அழகாக இருக்கும். சத்தமோ கேக்கவே வேணாம், பன்னிரண்டு சோழிகள், பதினான்கு குழிகள், யார் கடைசியில் அதிக சோழிகள் வைத்து இருக்காரோ அவரே வெல்வர். இதில் நடு  குழிக்கி "காசி" என்று பெயர், (பேங்க் மாதிரி), சேமித்து வைக்கலாம், நிறைய கணக்கு  உண்டு இதில்.

Indian Temples & Iconography: A game of dice - dayakattai

அடுத்து நாம் பார்ப்பது, தாயம் என்ற ஒரு விளையாட்டு,நிறைய யோசிச்சு விளையாட வேண்டிய விளையாட்டு, "காய்" பார்த்து நகர்த்த வேண்டும், "வெட்டி" அடுத்தவர் காயை வெளியே எடுப்பது தனி சுகம் தான்

Things To Be Proud of If You are a 90's Kid - Moodswag
.

மாலை நேரம் வந்து விட்டால் போதும், வெளியே விளையாடுவோம், பாண்டி என்ற ஒரு விளையாட்டு, இந்த ஊருhopscotch, அனால் கட்டம் வேற, இது தவிர, நொண்டி, houseboys, கண்ணாமூச்சி, police/thief, போன்ற விளையாட்டு இருக்கும்.

kallanga - Traditional Game / Girls Fun / 90's Nostalgic - YouTube

இது தவிர, 5 கல் விளையாடுதல், கற்களை, தூக்கி போட்டு லாவகமாக பிடித்தல்,சொப்பு சாமான் வைத்து போலி சமையல் செய்து விளையாடுதல், பாட்டியிடமும், அம்மாவிடமும், சின்ன சின்ன கோலம் போட பழகுதல், ,பூ கோலம், நேர் கோலம், சிக்கு கோலம், கோல நோடேபூக் ஒன்று இருக்கும், ஞாபகம்  வருதா....?. , கைப்பொருள் செய்வது, பூ , கூடை பின்னுதல்.

சில மேல் தட்டு மக்கள், அப்போதே, chess, carom, cards, sila board games விளையாடுவர்.

என்னங்க  பயண விளையாட்டு என்று சொல்லிவிட்டு, வேற எதையோ சொல்லி கொண்டு இருக்கீர்கள் , சில பயண விளையாட்டுகளையும் பார்போம், memory game என்று ஒரு விளையாட்டு, ஒரு பெயர்/ஊர் எதுவாகினும், ஒருத்தர் சொல்ல வேண்டும், அதை தொடர்ந்து, அடுத்தவர், முன்னவர் சொன்னதை சொல்லிவிட்டு, தனது சொல்லை சொல்ல வேண்டும், எப்படியே தொடர்ந்து எல்லோரும் விளையாட வேண்டும், ரொம்ப ஞாபகம் வைத்து விளையாட வேண்டிய விளையாட்டு. அடுத்து, தொடர் சொல் விளையாட்டு, ஒரு சொல், முடியும் எழுத்தில் அடுத்த சொல் இருக்க வேண்டும், அடுத்து என்னகளை vaithu, "பஸ்" என்று ஒரு விளையாட்டு, 1,2,3,4, ஐந்து, என்ற எண்ணிற்கு  பதிலாக, "பஸ்" என்ற வார்த்தை சொல்ல வேண்டும், மூன்று, அல்லது ஐந்து, எப்படி வேணாலும் கணக்கு  வைத்து கொள்ள வேண்டும். தவற விட்டவர்கள், ஆட்டத்தை விட்டு நீக்க பட்டு, அடுத்தவர் தொடர்ந்து விளையாடுவர். 

எப்ப பாரு விளையாட்டு தானா? கிளாஸ் எதுவும் செல்ல மாடீர்களா, என்று கேக்க தோணுகிறதா, செல்வோம், பாட்டு கிளாஸ், பரதநாட்யம்  , வீணை கிளாஸ், ஏனைய கிளாஸ் உண்டு. அப்போது, ஹிந்தி கிளாஸ் செல்லும் மோகம் எல்லோருக்கும் இருந்தது, ஹிந்தி பிரசார் சபா முலம், ஹிந்தி எழுத, படிக்கச் பழகுவோம். எந்த காலத்தில், பிள்ளைகளிடம், எனக்கு இன்னும் ஒரு மொழி தெரியும் என்று குற முடிகிறது. 

இந்த கிளாஸ் பற்றி ஒரு வார்த்தை சொல்ல விருப்ப படுகிறேன், நாம் கற்று கொள்ளாததை, நம் பிள்ளைகள் கற்க வேண்டும் , என்று அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாம்  சேர்த்து விடுகிறோம், அது அவர்களுக்கு வரமா, சாபமா, என்பது விவாததுக்கு உட்பட்டது தான். 

இது தவிர, பாட்டி வீடு, அத்தை வீடு, வேறு ஊர்களில் இருந்தால், அவர்கள் ஊருக்கு, செல்வோம். புதிய ஊர், புதிய நண்பர்கள், புதிய விளையாட்டு, அதுவும் சந்தோசமாக செல்லும்  நாட்கள். 

என்னங்க, படித்து முடித்தவுடன், ஒரு இருபது வயது, குறைந்து மாதிரி இருகிறதா? சிறுவர், சிறுமியர் பருவத்திற்கு சென்று விட்டீர்களா, இவ்வளவு விளையாட்டு,முச்சு விட கூட நேரம் இன்றி விளையாடினோம்? , என்று நினைவு வந்து இருக்குமே? , இந்த திருப்பதி உடன் , உங்களிடம் இந்த நீங்காத நினைவுகளை விட்டு விட்டு விடை பெறுகிறேன். மேலும், நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுநீர்களோ, உங்கள் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் , மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள், அனுபவத்தில் சொல்லுகிறேன். 

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, என்ற கவிதை வடிவத்தை விட, எப்படி கட்டுரை எழுதியில், என்னால் விரிவாக குற முடிந்தது. கட்டுரை படித்ததற்கு

நன்றி.
அபர்ணா ஸ்ரீராம்