கோடை விடுமுறை வந்து விட்டால் போதும், பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் தான். வேலை செய்யும் பெற்றோர்களுக்கு எந்த கேம்ப் இல் போடுவது, குறித்து ஒரு விவாதம் வந்து போகும் , சில பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பர். சிலர் தாய்நாடு சென்று வருவர். இந்த இரண்டரை மாதத்தை, (அமெரிக்காவில்) செலவிடு செய்வது மிக பெரிய காரியமாக போதும் போதும் என்று ஆகி விடும்.
முந்தைய வாரம் நாங்கள் எங்கள் நண்பர் குடும்பத்துடன் பித்ஸ்புர்க்ஹ மாகாணத்திற்கு சென்று இருந்தோம், பிர்தேயமாக, தொலைக்காட்சி பெட்டி இல்லாத வண்டியில், சென்றோம்.பயண நேரமோ ஆறு மணி நேரம், கிளம்பிய சிறிது நேரத்தில் , பிள்ளைகள் புத்தகம் படித்தனர், வீடியோ கேம் விளையாடினர்,தூங்கினர், நேரம் சென்ற பாடு இல்லை, இடமோ வரவில்லை, அவ்வளவு தான் "போர்" அடிக்கிறது என்றனர், சில விளையாட்டு சொல்லுங்கள் அம்மா என்றனர்.
எனக்கு ஞாபகம் வந்தது ஏன் பிள்ளை பருவம், இப்படி நெடிய தூரம் பயணம் செல்ல விடினும், பொழுது போக்குக்கு என்ன செய்தோம், என்று யோசிக்க வெய்தது. அம்மாவை தொந்தரவு செய்யாமல் தம்பி தங்கைகளுடன் என்ன செய்தோம்? என்ன விளையாடினோம்? நீங்களும் சிந்தியுகள், பட்டியல் இட தொடங்கலாமா?இதோ ஏன் எண்ணங்களும், உங்கள் எண்ணனும் நேர் கொட்டில் இருக்கிறது என்று பார்போமா?
ஆண் பிள்ளைகள் முக்கால் வாசி வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவர். நாம் சென்று அழைத்தால் தான் வீடு வந்து சேருவர், அனால் அது எப்படி தான் தெரியாதோ சாப்பாடு நேரம் மட்டும், சரியாக வந்து விடுவர். அவர்களுக்குள் தெரு போட்டி, நகர போட்டி, எல்லாம் நடுக்கும். சில ஆண் பிள்ளைகள் கில்லி, கோலி, பம்பரம், விளையாடுவர், ஒரு ஒரு விளையாட்டும் , அதற்கு இதமாக மிக சுவாரசியமாக இருக்கும். சில பேர், மொட்டை மடியில் சென்று பட்டம் விடுவர், அதற்கு மாஞ்சா என்ற ஒரு பிசியை தயாரிப்பர், அதில், கண்ணாடி துண்டுகள், ஏனைய பொருள் சேர்த்து அதை தாங்களே தயார் செய்வர். இதிலும் , டீல் விடும் போட்டி நடக்கும். எப்போது இதை தடை செய்து விட்டனர் என்று கேள்வி, உயிர்க்கு ஆபத்து என்றால் தடை செய்வது நல்லது. இது போதாதா நேரம் சிலவழிக்க, இது தவிர , குரங்கு பெடல் அடித்து, மற்ற நண்பர்கள் உதிவியுடன் , சைக்கிள் ஓட்ட கற்று கொள்வது, தோப்பிற்கு சென்று திருட்டு மாங்காய் அடித்து சாபிடுவது... நேரம் ரெக்கை கொட்டி கொண்டு பறந்து விடும்.
பெண் பிள்ளைகள் கூடிய மட்டும் வெளியே செல்ல மாட்டார்கள், அப்படியே சென்றாலும், இருடிற்கு முன் வீட்டிற்கு வரவும் என்ற ஒரு சொல் , சொல்லாமலே வரும். தனது விட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தில் உள்ள தோழி விட்டிலோ, விளையாடுவர். அப்படி என்ன தான் விளையாட முடியும் நான்கு சுவர்களுக்குள், மேலே படிப்போம், ....
பல்லாங்குழி என்று ஒரு சோழி விளையாட்டு உண்டு, வெள்ளை கலந்த பழுப்பும் நிறம் கொண்ட சோழிகள், பார்கவே மிக அழகாக இருக்கும். சத்தமோ கேக்கவே வேணாம், பன்னிரண்டு சோழிகள், பதினான்கு குழிகள், யார் கடைசியில் அதிக சோழிகள் வைத்து இருக்காரோ அவரே வெல்வர். இதில் நடு குழிக்கி "காசி" என்று பெயர், (பேங்க் மாதிரி), சேமித்து வைக்கலாம், நிறைய கணக்கு உண்டு இதில்.
அடுத்து நாம் பார்ப்பது, தாயம் என்ற ஒரு விளையாட்டு,நிறைய யோசிச்சு விளையாட வேண்டிய விளையாட்டு, "காய்" பார்த்து நகர்த்த வேண்டும், "வெட்டி" அடுத்தவர் காயை வெளியே எடுப்பது தனி சுகம் தான்
.மாலை நேரம் வந்து விட்டால் போதும், வெளியே விளையாடுவோம், பாண்டி என்ற ஒரு விளையாட்டு, இந்த ஊருhopscotch, அனால் கட்டம் வேற, இது தவிர, நொண்டி, houseboys, கண்ணாமூச்சி, police/thief, போன்ற விளையாட்டு இருக்கும்.
இது தவிர, 5 கல் விளையாடுதல், கற்களை, தூக்கி போட்டு லாவகமாக பிடித்தல்,சொப்பு சாமான் வைத்து போலி சமையல் செய்து விளையாடுதல், பாட்டியிடமும், அம்மாவிடமும், சின்ன சின்ன கோலம் போட பழகுதல், ,பூ கோலம், நேர் கோலம், சிக்கு கோலம், கோல நோடேபூக் ஒன்று இருக்கும், ஞாபகம் வருதா....?. , கைப்பொருள் செய்வது, பூ , கூடை பின்னுதல்.சில மேல் தட்டு மக்கள், அப்போதே, chess, carom, cards, sila board games விளையாடுவர்.
என்னங்க பயண விளையாட்டு என்று சொல்லிவிட்டு, வேற எதையோ சொல்லி கொண்டு இருக்கீர்கள் , சில பயண விளையாட்டுகளையும் பார்போம், memory game என்று ஒரு விளையாட்டு, ஒரு பெயர்/ஊர் எதுவாகினும், ஒருத்தர் சொல்ல வேண்டும், அதை தொடர்ந்து, அடுத்தவர், முன்னவர் சொன்னதை சொல்லிவிட்டு, தனது சொல்லை சொல்ல வேண்டும், எப்படியே தொடர்ந்து எல்லோரும் விளையாட வேண்டும், ரொம்ப ஞாபகம் வைத்து விளையாட வேண்டிய விளையாட்டு. அடுத்து, தொடர் சொல் விளையாட்டு, ஒரு சொல், முடியும் எழுத்தில் அடுத்த சொல் இருக்க வேண்டும், அடுத்து என்னகளை vaithu, "பஸ்" என்று ஒரு விளையாட்டு, 1,2,3,4, ஐந்து, என்ற எண்ணிற்கு பதிலாக, "பஸ்" என்ற வார்த்தை சொல்ல வேண்டும், மூன்று, அல்லது ஐந்து, எப்படி வேணாலும் கணக்கு வைத்து கொள்ள வேண்டும். தவற விட்டவர்கள், ஆட்டத்தை விட்டு நீக்க பட்டு, அடுத்தவர் தொடர்ந்து விளையாடுவர்.எப்ப பாரு விளையாட்டு தானா? கிளாஸ் எதுவும் செல்ல மாடீர்களா, என்று கேக்க தோணுகிறதா, செல்வோம், பாட்டு கிளாஸ், பரதநாட்யம் , வீணை கிளாஸ், ஏனைய கிளாஸ் உண்டு. அப்போது, ஹிந்தி கிளாஸ் செல்லும் மோகம் எல்லோருக்கும் இருந்தது, ஹிந்தி பிரசார் சபா முலம், ஹிந்தி எழுத, படிக்கச் பழகுவோம். எந்த காலத்தில், பிள்ளைகளிடம், எனக்கு இன்னும் ஒரு மொழி தெரியும் என்று குற முடிகிறது.இந்த கிளாஸ் பற்றி ஒரு வார்த்தை சொல்ல விருப்ப படுகிறேன், நாம் கற்று கொள்ளாததை, நம் பிள்ளைகள் கற்க வேண்டும் , என்று அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாம் சேர்த்து விடுகிறோம், அது அவர்களுக்கு வரமா, சாபமா, என்பது விவாததுக்கு உட்பட்டது தான்.இது தவிர, பாட்டி வீடு, அத்தை வீடு, வேறு ஊர்களில் இருந்தால், அவர்கள் ஊருக்கு, செல்வோம். புதிய ஊர், புதிய நண்பர்கள், புதிய விளையாட்டு, அதுவும் சந்தோசமாக செல்லும் நாட்கள்.என்னங்க, படித்து முடித்தவுடன், ஒரு இருபது வயது, குறைந்து மாதிரி இருகிறதா? சிறுவர், சிறுமியர் பருவத்திற்கு சென்று விட்டீர்களா, இவ்வளவு விளையாட்டு,முச்சு விட கூட நேரம் இன்றி விளையாடினோம்? , என்று நினைவு வந்து இருக்குமே? , இந்த திருப்பதி உடன் , உங்களிடம் இந்த நீங்காத நினைவுகளை விட்டு விட்டு விடை பெறுகிறேன். மேலும், நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுநீர்களோ, உங்கள் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் , மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள், அனுபவத்தில் சொல்லுகிறேன்.ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, என்ற கவிதை வடிவத்தை விட, எப்படி கட்டுரை எழுதியில், என்னால் விரிவாக குற முடிந்தது. கட்டுரை படித்ததற்கு
நன்றி.அபர்ணா ஸ்ரீராம்
No comments:
Post a Comment