"அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்"
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்"
அல்சைமரை தடுக்கும் மஞ்சள்
தெற்காசிய நாடுகளின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் ஏற்கெனவே நன்கு அறியப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வின் முடிவுகள் புதிய தகவல்களை கண்டறிந்துள்ளன.
அதாவது விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட் பொருள், அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்களை குணப்ப டுத்தும் தன்மை கொண்டது என்று அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்திய உணவு வகைகளில் மஞ்சள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது
அதாவது மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முரளி துரைசாமி.
ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை தங்களது உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்கு வதற்கான வாய்ப்புகள் குறைவதாக அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும், மனிதர்கள் மத்தியில் அடுத்த கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புற்றுநோய், மூட்டுவாதம் உள்ளிட்ட நோய்களை தடுப்பதில் மஞ்சளுக்கு இருக்கும் பங்களிப்பு குறித்து ஏற்கெனவே ஆய்வுகள் நடந்துவரும் நிலையில் மூளை அழுகல் நோயை தடுப்பதிலும் மஞ்சள் முக்கிய பங்காற்றலாம் என்கிற செய்தி மஞ்சளை தினமும் தங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியாக இருக்கும்.
மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை(தமிழில்)
"இன்னைக்கி என்ன அப்பா சமையலா?"என்று கேட்டுக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தன குழந்தைகள்.
"எப்படித் தெரியும்?"என்று கேட்மேன்.
"அதான் பருப்புக் குழம்பு மஞ்சள் கலரா இருக்குதே"என்றாள் மகள்.
அதென்னமோ தெரியலை. எனக்கு மட்டும் மஞ்சள் பொடி போடும் போது கை நடுங்கி நிறைய விழுந்துவிடுகின்றது.
சரி, குழம்புக்கு கறிக்கும் நிறம் வருவதற்காக மஞ்சள் சேர்க்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். மஞ்சளுக்கு நிறம் மட்டுமல்ல, மணமும் உண்டு, குணமும் உண்டு.
கையிலோ காலிலோ விளையாடும் போது காயம் பட்டுவிட்டால் உடனே அம்மா சிறிது மஞ்சள் பொடியை காயத்தின் மீது தூவி சேலை முந்தானையைக் கிழித்து ஒரு கட்டுப் போட்டு விடுவாள். ரெண்டே நாட்களில் காயம் குணமாகிவிடும். பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் அரைத்து உடம்பெங்கும் தேய்த்துக் குளிப்பார்கள். இதனால் தேவையில்லாத இடங்களில் மயிர் முளைப்பது கட்டுப்படுகின்றது என்பது மட்டுமல்ல, கொப்புளங்களும் பருக்களும் வருவதில்லை. சருமமும் பொலிவு பெறுகின்றது. சுமங்கலிப் பெண்களின் சின்னமான குங்குமமும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டது தான்.

இப்போது புற்று நோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தரப்பயன்படும் மஞ்சள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய புரதத்தை தடுக்கக் கூடியது என்கிறார்கள். மஞ்சளினால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை புற்று நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதனைக் கூடங்களில் செல்வளர்ச்சி மூலம் ஆராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். இந்த ஆராய்ச்சி முறைப்படி விரும்பி முன்வரும் புற்று நோயாளிகளுக்கு CUR CUMIN எனப்படும் மஞ்சள் பொருளால் செய்யப்பட்ட 500 மில்லிகிராம் மாத்திரைகளை ஒரு வாரத்திற்குக் கொடுத்து அது NF KAPPA B என்னும் புரதத்தைச் செயலிழக்கச் செய்கின்றா என்று பார்ப்பார்கள்.

இந்தப் புரதம் தான் உணவுக் குழாயில் புற்று நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாகின்றது. லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் விரைப்புற்றுநோய், சருமப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
மனிதர்களிடம் நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகள் மூலம் அல்ஸெமிர் எனப்படும் நினைவிழப்பு நோய்க்கு ஒரு மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வேறு சில விஞ்ஞானிகளோ மஞ்சளில் வீக்கத்தை வற்றச் செய்யும் பண்பு இருப்பதால் அதைக் கொண்டு CROHN நோய் எனப்படும் குடல் நாளநோய் வராமல் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஆசியக் கண்ட நாடுகளில் வசிக்கும் மக்களிடையே இத்தகைய நோய்கள் குறைவாக இருப்பதால் மஞ்சள் கலந்த கறி காரணமாக இருக்குமா என்று ஆராயப்பட்டது. தொண்டையில் நீண்டகாலம் வீக்கம் இருக்கும் போது தொண்டைச் சுவரில் உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இத்தகைய நிலை உள்ளவர்களில் 10 விழுக்காட்டினருக்கு புற்றுநோயாக மாறுகின்றது. இது BCRECஇன் உணவுக் குழாய் புற்று நோய் எனப்படுகின்றது. இப்போது புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு உள்ள வெவ்வேறு பொருட்கள் எவ்வாறு புற்றுநோயை உண்டாக்கக் கூடிய NF-KAPPA B என்ற புரதத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை ஸ்வான்ஸீ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். புற்று நோய் எதிர்ப்புப் பண்வு உள்ள பொருட்களில் மஞ்சள் முக்கியமானது.
இதற்காக கறிமசாலா கலந்த உணவை உண்டுவிட்டு கூடவே ஒயின்குடித்தால் பயனில்லை என்று GAREIT JENKINS என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். உங்களுக்குத் தான் தெரியுமே மேலை நாட்டவர்கள் உணவு உண்பதற்கு முன்பு சிறிது ஒயின் குடிப்பார்கள் உணவு உண்டுகொண்டே நடுநடுவே ஒயின் குடித்து தொண்டையை நனைப்பார்கள் கடைசியாக உண்டு முடித்த பிறகு ஆங்கிலத்திலே WASHING DOWN என்பார்களே. அதாவது தொண்டையிலே இருக்கின்ற உணவை உள்ளே இறக்குவதற்கா ஒயின் குடிப்பார்கள். நீங்கள் என்னதான் மஞ்சள் மஞ்சளாக கறி செய்து சாப்பிட்டாலும் குடிமகனாகிவிட்டால் தொண்டைப் புற்றுநோய் உங்களை தாக்காமல் விடாது.

மேலும் மஞ்சள் கலந்த மசாலா உணவு வேண்டும் என்பதற்காக தினமும் மஞ்சல் தின்று கொண்டே இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால் பல மசாலா உணவுப் பொருட்களில் குறிப்பாக இந்திய உணவுகளில் ஏராளமாக கொழுப்புச் சத்து கலந்துள்ளது. தினமும் நிறைய இந்த உணவு உண்டால் இதய நோய் வரலாம் என்கிறார் டாக்டர் ஜென்கின்ஸ். ஆகவே கொழுப்புச் சத்து குறைவாக உள்ள உணவில் மஞ்சல் கலப்பது அல்லது மஞ்சளை மாத்திரையாக தயாரித்து உட்கொள்வது நல்லது என்று கருதப்படுகின்றது.
மஞ்சளில் அடங்கியுள்ள
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 349 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 13.1 கிராம்
புரதம் (Protein) 6.3 கிராம்
கொழுப்பு (Fat) 5.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 3.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.6 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 69.4 கிராம்
கால்சியம் (Calcium) 150 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 282 மி.கி
இரும்பு (Iron) 67.8 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 278 மி.கி
செம்பு (Copper) 0.39 மி.கி
மாங்கனீசு (Manganese) 8.38 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 2.72 மி.கி
குரோமியம் (Chromium) 0.069 மி.கி
கரோட்டீன் (Carotene) 30 மை.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 2.3 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 18 மை.கி

மஞ்சள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ஈரோடுதானே!
இல்லை எங்களுக்கு “மஞ்சக்காட்டு மைனா எனைகொஞ்சி கொஞ்சிப்போனா” என்ற நினைவென்றால் நான் பொறுப்பல்ல.
“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”
“மஞ்சளும் குங்குமம் கொண்டதாமரைப்பூ பேரின்பஓடையில் தள்ளாடுது”
“மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
“மஞ்சள் அரைக்கும்போதுமதிலேரிப்பாத்த மச்சான்
பக்கத்தில் வந்தாலென்ன சொந்தம் காண”என்று சிலருக்கு
பாடத் தோன்றலாம்.மஞ்சளைப்பற்றிப்பாடாத கவிஞர்கள்
இருக்கமாட்டார்கள்.
மஞ்சள் எனில் மங்களம். மஞ்சள் இல்லாத பண்டிகை எதையும் தமிழரிடத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.
தென்னிந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட
மஞ்சளானது ஈரோடு கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்
அதிகம் விழைகிறது,ஈரோட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
பருத்தி,கரும்பு போன்று
மஞ்சள் பெரிய அளவில் வியாபாரப்பொருளாகும்.ஈரோட்டில் இதற்கென மஞ்சள்மண்டிகள் நிறைய உள்ளன.சமீபத்தில்கூட ஈரோட்டில் “மஞ்சள் வளாகம்”ஒன்று துவங்க முதல்வர் அவர்கள் அடிக்கல்நாட்டியுள்ளார்.
மஞ்சள் பூமிக்கடியில் விழையும் கிழங்குவகையைச்சார்ந்தது.வெட்டி எடுக்கப்படும் கிழங்கை மாட்டுசாணிப்பாலில் ஊரவைத்து வேகவைத்து
பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.இதுவே கறிமஞ்சள் ஆகும்.
கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் &பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள்,சோ ப்புகள்,தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன.மற்றபடி மஞ்சள் போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.
எனவே இன்று நம்ம ஊர்மஞ்சளைப்பற்றிக்கொஞ்சம்...
மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும்,குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும்,
சுவையின்மை போக்கும்,
வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும்,தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria, Chronic skin eruptions ]
மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
இல்லை எங்களுக்கு “மஞ்சக்காட்டு மைனா எனைகொஞ்சி கொஞ்சிப்போனா” என்ற நினைவென்றால் நான் பொறுப்பல்ல.
“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”
“மஞ்சளும் குங்குமம் கொண்டதாமரைப்பூ பேரின்பஓடையில் தள்ளாடுது”
“மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
“மஞ்சள் அரைக்கும்போதுமதிலேரிப்பாத்த மச்சான்
பக்கத்தில் வந்தாலென்ன சொந்தம் காண”என்று சிலருக்கு
பாடத் தோன்றலாம்.மஞ்சளைப்பற்றிப்பாடாத கவிஞர்கள்
இருக்கமாட்டார்கள்.
மஞ்சள் எனில் மங்களம். மஞ்சள் இல்லாத பண்டிகை எதையும் தமிழரிடத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.
தென்னிந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட
மஞ்சளானது ஈரோடு கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்
அதிகம் விழைகிறது,ஈரோட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
பருத்தி,கரும்பு போன்று
மஞ்சள் பெரிய அளவில் வியாபாரப்பொருளாகும்.ஈரோட்டில் இதற்கென மஞ்சள்மண்டிகள் நிறைய உள்ளன.சமீபத்தில்கூட ஈரோட்டில் “மஞ்சள் வளாகம்”ஒன்று துவங்க முதல்வர் அவர்கள் அடிக்கல்நாட்டியுள்ளார்.
மஞ்சள் பூமிக்கடியில் விழையும் கிழங்குவகையைச்சார்ந்தது.வெட்டி எடுக்கப்படும் கிழங்கை மாட்டுசாணிப்பாலில் ஊரவைத்து வேகவைத்து
பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.இதுவே கறிமஞ்சள் ஆகும்.
கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் &பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள்,சோ
எனவே இன்று நம்ம ஊர்மஞ்சளைப்பற்றிக்கொஞ்சம்...
மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும்,குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும்,
சுவையின்மை போக்கும்,
வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும்,தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,
மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.[மஞ்சள் சேர்த்து செய்யப்படும் குளியல் கலவைத்தூள் செய்முறை பின்னர் தருகிறேன்.]முகப்பருக்களை நீக்க உதவும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.
சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது.
மேலும் மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமைபற்றி
பத்மா[தேன் துளி] அவர்களின் கட்டுரைப்பதிவினை மக்கள் ஏற்கனவே அறிவீர்கள்.இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளைசேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]
கால் ஆணிக்கு = கொஞ்சம்மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி
இலை +கற்பூரம் சிறிது>இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டி
வர குணமாகும்.
பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.
முகப்பருக்களையும்,அழகைக்குறைக் ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்க்கு உள்ளதால்
மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆண்மக்களே மறக்கம மஞ்சளை சமையல்ல சேத்துக்கங்க!
எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர்
வழக்கம்.
இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால்
மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.
இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும்
பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன்
நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள்
தெளிவாக அறிந்திருந்தனர்.
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.[மஞ்சள் சேர்த்து செய்யப்படும் குளியல் கலவைத்தூள் செய்முறை பின்னர் தருகிறேன்.]முகப்பருக்களை நீக்க உதவும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.
சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது.
மேலும் மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமைபற்றி
பத்மா[தேன் துளி] அவர்களின் கட்டுரைப்பதிவினை மக்கள் ஏற்கனவே அறிவீர்கள்.இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளைசேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]
கால் ஆணிக்கு = கொஞ்சம்மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி
இலை +கற்பூரம் சிறிது>இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டி
வர குணமாகும்.
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.
முகப்பருக்களையும்,அழகைக்குறைக்
மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆண்மக்களே மறக்கம மஞ்சளை சமையல்ல சேத்துக்கங்க!
எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர்
வழக்கம்.
இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால்
மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.
இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும்
பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன்
நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள்
தெளிவாக அறிந்திருந்தனர்.
அபர்ணா ஸ்ரீராம் .
மஞ்சள் வெயில் மாலைக் கதிர் எழுத்துகளால் ஜொலிக்கிறது. மஞ்சளின் மகிமையை மடை திறந்த வெள்ளமாக வெளிப்படுத்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி! மொத்தத்தில் மஞ்சள்தூள்��
ReplyDelete