Wednesday, July 8, 2020

அவர்கள் 




அவர்கள்
 
இன்று மோகனின்  பிறந்த நாள், அதற்காக விழா  ஒன்று ஏற்பாடு செய்து இருந்தான்.. சுந்தரம் தன்னை தயார் படுத்தி கொண்டு அங்கு சென்று அடைந்தான். உணவு மற்றும் பல விதமான பான வகைகள் தயாராக இருந்தது . இன்னிசை கச்சேரி தொடங்கியவுடன் விழா களைகட்டியது. விழா நடந்து கொண்டு இருக்கட்டும்," நாம் சற்றே மோகன் மற்றும் சுந்தரம் பற்றி ஒரு முன்னோட்டம் காண்போம்." 
 
மோகன் மற்றும் சுந்தரம், விடுதியில் தங்கி ஒன்றாக படித்து வந்தவர்கள், உயர்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் அந்த கல்லூரியில் தன் உயர்நிலை படிப்பை தொடர வந்து சேர்ந்தான்.  சுந்தரம் ஒரு தனியார் நிறுவனத்தில் சார்பாக அங்கு படித்து கொண்டு இருந்தான். முதலில் சற்றே விலகி இருந்தாலும் நண்பர்கள் இரண்டு பெரும் சிறிது காலத்து பின்னர் , இணை பிரியாத நண்பர்களாக மாறி  இருந்தனர்,  சற்றே நெருங்கியும் பழகினர். படித்து முடித்த பின்னரும் தங்கள் நட்பை தொடர்ந்தனர். மோகன் தன் திறமையால் ஒரு நிறுவனத்தை தொடங்கினான். இருவருக்குமே   பணமும் நட்பும் சேர்ந்து வாழ்கையை இனிமையாக்கியது.
 
"நம்மை தொடர விடாமல் அங்கு விழாவில் ஏதோ அமளி தென்படுகிறது. "
 
அங்கு மோகன் மயங்கி விழுந்து இருந்தான். வெகு விமர்சையாக  விழா முடியும் தருவாயில் இப்படி ஒரு அசம்பாவிதம்  . டாக்டர் பல பரிசோதனைகளை செய்தார். ஒரு நாள் மட்டும் மோகனை ஆய்வு செய்து விட்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டனர். 
 
அன்று நண்பர்கள் இரண்டு பேரும், ஒரு கடையில் காபி அருந்தி  கொண்டு இருக்கையில், மோகனுக்கு ஒரு போன் கால் வந்தது. ரத்த  பரிசோதனை பேரில்  அவனுக்கு ஹெயச்ஐவி/எய்ட்ஸ்  இருப்பதாக டாக்டர்  சொல்லி இருக்கிறார்.சுந்தரம் அதிர்ந்தான் . ஏன்? அவனும் மோகனும் ஈர்  உயிர் ஓர்  உடல்.
 
(கலாச்சாரம் பெருகி வரும் இக்காலத்தில் ஹெயச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வு கதை.- இனிமேலாவது நம் பாரம்பரியத்தை போற்றுவோம், காப்போம் . )
 
அபர்ணா ஸ்ரீராம்.

No comments:

Post a Comment