"ஈன்ற பொழுதினில் தன மகனே சான்றோன் எனக் கேட்ட தாய்".
எனக் குறள் கூற , ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஒரு எதிர்ப்பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளை, தங்களை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி வளர்த்து வருகிறார்கள். மணி மணியாக நான்கு குழந்தைகளில் தாய் ஆகிய நான் உங்களிடம் சில குழந்தை வளர்ப்பு கூறுகள் பற்றிக் உங்களிடம் ஒரு தோழியாகப் பகிர விரும்புகிறேன்.
முதலில் குழந்தைகளிடம் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள் . நாம் சிறு வயதில் கற்றுக் கொள்ளாததை நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு அவர்களை அந்த, இந்த என்று எல்லா வகுப்புகளில் சேர்க்காதீர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து கொண்டு செயல் படுங்கள். இது அவர்கள் தேர்ந்து எடுத்த பாதையில் அவர்களை முன்னேற்றி செல்ல உதவும்.
அவர்களிடம் நிறையப் பேசுங்கள் , சின்ன சின்ன விஷயங்களுக்குச் செவி சாயுங்கள், தினமும் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் "எப்படி இருந்தது இந்நாள் ? இன்று பள்ளியில் என்ன சுவாரஸ்யமாக நடந்தது என்று வினவுங்கள். இரண்டு ஓர் நாள் செய்து பாருங்கள், மூன்றாம் நாள் அவர்களே "அம்மா என்று என்ன நடந்தது தெரியுமா??" என்று ஆவலோடு கூவிக் கொண்டே வருவார் கள்.
ஆண் பிள்ளைகளிடம் பெண் பிள்ளைகளை மதிக்கச் சொல்லி வளர்த்து விடுங்கள் . பெண் பிள்ளைகளைத் துணிவோடும் அவர்கள் தனித்துவமாக எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தைச் சிறு வயதிலிருந்தே விதைக்க வேண்டும். இது அவர்களை எந்நேரமும் மிகவும் தைரியமாக எந்த சூழ் நிலையையும் சவாலோடு சந்திக்க இயலும்.
அவர்களிடம் அன்பு கொள்ளுங்கள், அதே சமயம் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். ஆனால் அந்த கண்டிப்பு ஓர் நாளும் நம்மிடையே பயம் கொள்ளக் கூடாது , அந்த பயம் பிற்காலத்தில் சில விசயங்களை மறைக்கக் கூடியதாக அமையும். மிகவும் சிந்தனையுடன் செயல் பட வேண்டும். அவர்களிடம் நிறைய நேரம் செலவு செய்யுங்கள், விளையாட்டில் போட்டா போட்டி , சுற்றுலா செல்லுதல், பல நினைவுகளுக்கு இது வித்தாக அமையும். கதை கூறி வளர்க்க வேண்டும் இது அவர்களின் கற்பனை திறனை வளர்க்க உதவும்.
தேக ஆரோக்கியம், சத்தான உணவு வழக்கம் முறையை அவர்களிடம் பேசுதல் வேண்டும். அவர்களுடன் தியானம், யோகா பயிற்சி, சிறு உடற்பயிற்சி சேர்ந்தே செய்து பழகுங்கள்.
என் நேரமும் அவர்கள் மேல் நாம் நம்பிக்கை இருத்தல் வேண்டும் . தப்ப செய்து இருந்தாலும் அவர்கள் நம்மிடையே அதைப் பகிர்தல் வேண்டும் , எந்த ஒரு சூழயலிலும் நம்மைத் தான் முதலில் அணுக வேண்டும், அந்த நம்பிக்கையை நாம் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
கூச்சம் இல்லாமல் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ப நாம் அவர்களிடம் உரையாடல் கொள்ளுதல் வேண்டும் , இது வீண் சந்தேகங்கள் , நண்பர்களிடம் இருந்து தவறான கருத்த்துக்களுக்கு வரா மல் இருக்க ஏதுவாக இருக்கும் . முதன்மையான தகவல் நம்மிடம் இருந்து தான் வர வேண்டும். எந்த கடவுள் வழிபாடு ஆக இருந்தாலும் சரி தெய்வீக வழிபாடு, நம்முடைய பண்பாடு , சம்பிரதாயங்கள் , சாஸ்திரங்கள் கூறி வளர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரு தலைமுறையே அழிந்து விடும் . அதனின் விழுமியங்கள் கூறி வளருங்கள் .
நம்மைச் சார்ந்தே அவர்கள் இருக்கக் கூடாது. நாம் இல்லை என்றாலும் அவர்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களைச் சிறு வயதிலிருந்தே அவர்களைத் தயார் செய்வதோடு தனியாகவும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.பண விஷயம், சிறு சிறு அன்றாட வீடு வேலைகள் பழகி விடுங்கள் பின்னாளில் , சிறிய வேலைகள் கூட தெரியாமலும் , அதுவே பெரிய வேலையாகவும் தோன்றும்.
அவர்களின் வெற்றியை எவ்வாறு கொண்டாடுகிறோமோ அதே அளவு அவர்களின் தோல்விகளை அவர்களுக்குச் சந்திக்க ஊக்குவிக்க வேண்டும் , அவர்களை மனது அளவில் தயார் செய்தல் வேண்டும். முறையான ஒரு அணுகு வழியை நாம் அவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.
அவர்கள் நம்மை கூர்ந்து கவனித்து கொன்டே இருப்பார்கள்.நமது பிரதி பிம்மங்கள தான் அவர்கள் வளருவார்கள். ஒவ்வொரு செயலையும் நாம் மிகவும் கவனமாக எடுத்து வைத்தல் வேண்டும். கணினியில் நேரம் செலவு செய்தல், கைபேசியில் நேரம் செய்தல், நண்பர்களிடம் பேசுதல் இவை எல்லாம் இதில் அடங்கும். பெற்றோராக நமக்கு இது தான் தலையாய கடமை.
மொத்தத்தில் அவர்களிடம் ஒற்ற தோழனாகத் தோழியாக இருங்கள், அப்பறம் என்ன "என் அப்பா, அம்மா போல் இவ்வுலகில் இல்லை என்று அவர்களே உங்களைப் போற்றி கூறுவார்கள்"
No comments:
Post a Comment