Wednesday, April 14, 2021

கஷாயம்

  மெய்யோ பொய்யோ என்று இருந்தது இப்போ  தான் போல இருக்கிறது. இதோ இன்று வளைகாப்பு சீமந்தம் முடிந்து சுந்தரியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஆயிற்று. அந்த காலம் போல் இல்லாமல் இப்போது பிரசவம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. எனக்கும் இன்னும்  நினைவு இருக்கிறது, எங்கள் கிராமத்து வீட்டுக்கு   நாங்கள் செல்லும் போது எல்லாம் அப்பா கூறுவார்" இதோ எந்த இடத்துல நான், உங்க அத்தைக ரெண்டு பெரும் பொறந்தோம். " அப்போதெல்லாம் வீட்டில் பிரசவம் நடக்கும்.   

சுந்தரி  காலம்  வரும் போது  குழந்தைகள் மற்றும் தாய்மாரின் நன்மைக்காக அது மருத்துவமனைக்கு மாறியது. இப்போ மறுபடியும் வெத்தலை பாக்கு வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அதற்கு பெயர் ஏதோ "Home birth " ஆம். அதற்கான வகுப்புகளின் சுந்தரி பங்கேற்று கொண்டு இருக்கிறாள். பிரசவம் பார்க்கும் மருத்துவர் கிடையாது , அவர்களுக்கு பெயர் "Midwife " ஆம். இதில் பல வகை உண்டு, தண்ணீர் மற்றும் நிலத்தில். நல்ல வேலை திரிசங்கு சொர்க்கம் மாதிரி நடுவில் ஏதும் இல்லை.  

ஆச்சு இன்னும் கொஞ்ச மாசமோ நாளோ சுந்தரிக்கு குழந்தை பிறந்துவிடும். குழந்தை பிறக்கும் நேரம் படைக்கும் கடவுள் ஆனா அந்த மக ஈசனுக்காய் தெரியாதாம். எப்போ நடக்கிறதோ பார்க்கலாம் . எல்லாவற்றிற்கும் ஒரு காலம் வரும்.  அன்று ஒரு செவ்வாய் கிழமை, சுந்தரிக்கு குறித்த தேதியில் பிரசவத்திற்கு முன்  கடைசி மருத்துவர் விசிட். இன்று யாவது என்னுடன் வாங்களேன் என்று சுந்தரியின் கேள்விக்கு என்ன தோன்றியதோ  சரவணன் நானும் வருகிறேன் என்று கிளம்பி விட்டான் அவளுடன் . அங்கு சென்றவர்களுக்கு செய்தி காத்து கொண்டு இருந்தது. முடிந்த  குழந்தை பிறந்து விடும் என்றும் அறிகுறி இருக்கிறது , எதற்கும் நான் ஒரு procedure செய்து விடுகிறேன் மற்றது எல்லாம் கடவுள் விட்ட வழி என்று கூறினார் மருத்துவர். இந்த செய்தியை வீட்டுக்கு கொண்டு வந்தனர் ரெண்டு பேரும், இதை கேட்டுவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை, எதற்கும் இருக்கட்டும் என்று என்னால் ஆனா கை  மருந்து செய்துவிட்டு சுந்தரியை நன்றாக எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னேன் , குளித்து முடித்து வந்தவளுக்கு நான் செய்த கை மருந்து கொடுத்து சிறிது ஓய்வு எடுக்க கூறினேன்.  

அன்று ஏனோ வானிலை கூட சற்று வித்தியாசமாக இருந்தது, எப்போது மழை வரும் என்று சொல்லி கொண்டே இருந்தது இடியும்  அதன் முழக்கங்களும். இருங்க இருங்க சுந்தரி கூப்பிடுற போல இருக்கு , கூப்பிட்டது சுந்தரியே தான் ,   இடுப்பை பிடித்து கொண்டு இருந்தாள் , மூன்று குழந்தைகளை பெற்று எடுத்த எனக்கு தெரிந்தது இது பிரசவ வலி தான் என்று. இப்படிி ஒரு சந்தர்ப்பம் அமைத்தால் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சரவணனும் , சுந்தரியும் table போட்டு வைத்து இருந்தனர். முதல் படி midwife கூப்பிடுவது , இரண்டாவது வெந்நீர், துவாலை , பெட்ஷீட் , கத்தரிக்கோல் எடுத்து வைப்பது, எந்த இடம் அதை தயார் செய்வது. எல்லாம் செய்தாகி விட்டது, அவள் வருவது மட்டும் தான் பாக்கி. இங்கு சுந்தரி கோ நிமிடம் தருக்கு நிமிடம் வலி அதிகரித்துக்கொண்டே இருந்தது . அவள் வருகை இருக்க மட்டும் பொறுக்காதது போல் ,வாசலின் மணி சத்தம் , அவள் தானோ ? வந்தது சரவணன், எதற்கும் இருக்கட்டும் என்று அவனுக்கும் போன் செய்து வைத்தேன். 

 இதோ சுந்தரி குழந்தை பிறப்பதற்கு தயார் ஆகி விட்டால், crowning என்று கூறுவார்கள் , அந்த பிஞ்சு  இந்த பூவுலகை சந்திக்க தன் தாயின் வயிற்றில்  இருந்து வெளி வந்து கொண்டு இருந்தது. இதோ அந்த தருணம், அந்த கடைசி அலறல் சுந்தரி இடம் இருந்து,  "வீல்" என்று கூறி கொண்டு மிகவும் அழகான நிறைய தலை முடியுடன் பெண் குழந்தை பிறந்து விட்டது. 

 சொல்ல மறந்து விட்டேன், எங்கள் வீட்டு  மஹாலக்ஷ்மி பிறந்த நேரம் : மாலை  நேரம் : 5.30 pm, கிழமை : செவ்வாய் , பெயர் : சந்தியா , நட்சத்திரம்  : புனர்பூசம் , பிறந்த இடம் :  எங்கள் வீட்டில் சமையல் அறை ,அன்று என் அப்பா நினைவு கூறிய இடமும் அது தான்ு ,நான் கொடுத்த கை மருந்து : கஷாயம்.   இவ்வளவு நேரம் உங்களிடம் கதை கூறி கொண்டு இருந்த நான் கோசலை என்ற கௌசல்யா , Retd . Head Nurse  Government Hospital , Madurai . 

No comments:

Post a Comment