Monday, June 7, 2021

திதி 

எப்போதும் போல் அன்று பொழுது புலர்ந்தது. வெளி உலக மக்களுக்கு இன்றைய நாள் புதிதாக விடியும் ஆனால் பல நாட்களாக, மாதங்களாக இந்த ஆறு அடி எட்டு அங்குல அறை அடங்கி ஒடுங்கி இருக்கும் நிலாவுக்கு இது இப்பவும் போல ஒரு நாள்.  நிலா, அது தான் அவள் பெயர், தாய் தந்தை எத்தனை சிலாகித்து இந்த  பெயரைச்  சூட்டி இருப்பார். வானில் என்றும் மிளிரும் ஒரே ஒரு நாள் தவிர , பதினைந்து நாளுக்கு ஒரு முறை தன்னை மேலும் அழகுடன் பிரகாசித்துக் காணப்படும் அதன் ஒளி வட்டமும் அது போல் என்றும் சிறந்து வாழ வேண்டும் என்று நினைத்துச் சூட்டி இருப்பார். அம்மா சாந்தா , அப்பா முகுந்தன் , தங்கை யமுனா,  தம்பி கண்ணன் , இவர்களுடன்  வாழ்ந்த அந்த நாட்கள் பொற்காலம்.  மிதிவண்டியில் அப்பாவுடன் பள்ளிக்குப் பயணித்த போது கதை சொல்லிக் கொண்டு வரும் வருவார் , அதே மிதி வண்டியை தானும் கற்றுக் கொண்டு தன்னுடைய தங்கை தம்பி கற்றுக் கொடுத்தது என்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. அது ஒரு கனாக் காலம், நிலா வீட்டிற்குப் பெரிய பெண் என்பதால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவளிடம் நிறைய இருந்தது. சில சமயம் இவள் அதனுடன் தான் பிறந்தாலே என்பது போல் ஐயம் ஏற்படும் . அதே போல் அவள் மற்றவர்களுக்கு உதவும் குணம் , தெருவில் உள்ள எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நிலா.  சிறை வாசம் என்று  இதைக் கூறலாம், எப்போது இது ஆரம்பித்தது என்று தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தால். எல்லாம் நடந்து முடிந்து போயிற்று, போன வருடம்  இதே போல் கத்திரி வெயில் காலம், காலை எப்போதும் போல தன்னுடைய கட்டாய தொழில்சார்  வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டு இருந்தால். அம்மாவின் எப்போதும் மணக்கும் காபி உடன் கிளம்பியாயிற்று, அன்று ஏனோ காலை இருந்து ஏதோ பெரிய விபரீதம் நடக்கும் போல் ஓர்  அறிகுறி தென்பட்டு  கொண்டே இருந்தது. தன்னை மீறி என்ன நடந்துவிடும் என்ற இறுமாப்புடன் கிளம்பி விட்டாள். அன்று எல்லோருக்கும் வருடாந்திர கட்டாய முழு உடல் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை சோதனை எடுத்தனர். அது முடிந்து எப்போதும் போல் தினப்படி வேளையில் மூழ்கிவிட்டாள் . இது நடந்து சில நாட்கள் பிறகு தலைமை  மருத்துவர் கூப்பிடுவதாக ஒரு செய்தி வந்தது, நமது பாரத தான் கூப்பிட போகிறார் என்று ஒரு துள்ளலுடன் அவர் அறையை அடைந்தாள்.  அவர் சிறிது அல்ல பெரிதும் சோர்ந்து  தென்பட்டார், தனக்குத் தான் அப்படித் தோன்றியதோ? Hello டாக்டர். கூப்பிட்டிங்களா ? வாம்மா , வந்து உட்கார்  வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கிறது. going on good  டாக்டர், எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. மனதுக்கு மிகவும் திருப்தி ஆக இருக்கிறது.  நீ இப்போது உன் பெற்றோர் உடன் தான் இருக்கிறாய்  அல்லவா ?  ஆமாம் டாக்டர், எப்போது இவர் ஏன் இதை எல்லாம்  கேட்கிறார்? கல்யாணத்திற்கு என்றால் இன்னும் குறைத்து இரண்டு வருடங்கள் இருக்கின்றன, மேல் படிக்க வேண்டும், நல்ல ஹாஸ்பிடல் சேர வேண்டும், தம்பி தங்கை நன்றாக படிக்க வேண்டும் அப்பாவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இப்படிப் பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அவள் முன் விழுந்தன. அப்போது அவளுக்குத் தெரியாது இவை எல்லாம் அடுத்து அரை நொடியில் சிதறி விழா போகின்றன என்று.  நான் இப்போது சொல்லப் போகும் செய்தி உனக்கு எத்தனை துன்பத்தைக் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும், வேண்டும் என்றால் நாளை உன் பெற்றோர் உடன் கலந்து பேசலாம்... வேண்டாம் டாக்டர் ஏதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் தாங்கிக் கொள்வேன்,  உனக்கு வந்து இருப்பது புது வகையான தொற்று நோய். இதற்கு இன்னும் பெயர் சுட்ட படவில்லை, இதன் நோய்க் கிருமி கொண்டு தான் இதை அறிவர் . கிருமியின்  பெயர் COVID-SARS  . இதற்கு இன்னும் எதிர்ப்புச் சக்தி மருந்து இல்லை என்றே  கூறலாம். இது ஒரு தொற்று  நோய் என்பதால் உன்னை நீ உடனடியாக தனிமைப் படுத்த வேண்டும்.  நம் ஹாஸ்பிடல் ஒரு தனி அறையை உனக்கு ஒதுக்கி இருக்கிறேன்.  இப்படி அவர் கூறி இதோ இன்றுடன் இருபது நாட்கள் ஆகிறது. தொண்டை வலிக்கிறது, இருமல் வந்து கொண்டே இருக்கிறது. நிறுத்த பாடு இல்லை. சுவை இல்லை, நாசி இல்லை, வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறியக் கூட வாய்ப்பு இல்லை.  கண்கள் குடும்பத்தை தேடுகிறது , அம்மா மடியில் தலை வைத்துப் படுக்க வேண்டும் போல் உள்ளது, இன்னும் எத்தனை நாள் இது தொடரும் ? முடிவே இல்லாத ஒரு பயணம் தொடர்கிறது.  யாரோ வருகிறார்கள், யார் என்று அறிய வாய்ப்பு இல்லை. உடல் முழுவதும் ஒரு விதமான suit அணிந்து வருகிறார்கள் . அவர்களால் அதைத் தரித்துக் கொண்டு எப்படிச் செயல்பட முடிகிறது? ஒரு செவிலியர் ஆக தன்னால் அவர்களுடைய கஷ்டம் புரிந்து கொள்ள முடிந்தது. அதையும் மீறி "இன்றும் அதே பல்லவி தான் பாடப்போகிறார்களா ? இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை , மருந்து ஏதும் கண்டு பிடிக்க வில்லை இதைக் கேட்டு கேட்டு காது புளித்துப் போய்விட்டது.  இன்றாவது நல்ல செய்தி வருமா? அந்த தானியங்கி கதவு கொண்டு திறந்து கொண்டு வருபவர்களுக்கு ஏங்கிக் கொண்டு படுத்துக் கிடந்தாள் . வந்தார்கள், வந்தவர்களிடம் புதிதாகத் தகவல் எதுவும் இல்லை. இப்படியே எத்தனை நாள் தான் கடப்பது? நிலாவிற்கு மிகவும் அலுப்பாக இருந்தது.  மறுநாள் அவர்கள் வரும்போது பெற்றோருடன் தொலைப்பேசியில் பேச இயலுமா என்றாவது கேட்க வேண்டும் . அவள் நினைத்தது அடுத்த நாள் "video call " அம்மா அப்பா விடம் பேச முடிந்தது, அம்மா சற்று வயது முதிர்ந்து காணப்பட்டாள் பாவம் கவலையால் இருக்கும் . ஆண்கள் அவ்வளவு எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள், அப்படிப் பட்ட அப்பா சற்று கண்கள் கலங்கினார் போல் காணப்பட்டார். நல்ல காலம் இந்த கொடுமையைத் தம்பி/தங்கை காணவில்லை .  அன்று ராத்திரி நிலா ஒரு முடிவு எடுத்துவிட்டால், இது தான் தக்க சமயம் . நம் இணைந்து எண்ணத்தை நிறைவேற்ற நாள் வந்து விட்டது. நல்ல வேலை அம்மா அப்பாவையும் பார்த்து ஆயிற்று.  மறுநாள் டாக்டர் வந்த பிறகுத் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். முடியவே முடியாது என்று கூறிவிட்டார் . தர்மத்தைத் தாண்டி தன தொழிலுக்குத் துரோகம் செய்வது கடினம் என்று கூறி விட்டார். அவர் கூறுவதை விட்டுவிட்டு அப்படியே போகிறவள் இல்லை நிலா, விடப் பிடியாக நின்றாள் .  வேறு வழி இல்லாமல் அவள் தினமும் படும் பாட்டை பார்த்து அவரும் எத்தனை நாள் தான் தாங்கிக் கொள்வார்.  ஒரே ஒரு ஊசி, இதுவே இது வேற ஊசி ஆகி இருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கும், நேற்று நம்முடன் இருந்த நிலா இன்று மறைந்து விட்டாள். எதச்சையாக இன்று அமாவாசை - வானில் என்றும் மின்னும் நிலா அன்று ஒரு நாள் மட்டும் மறையும். 

No comments:

Post a Comment